நெப்டியூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூன்  ♆
Neptune from Voyager 2.
The picture shows the Great Dark Spot and its companion bright smudge; on the west limb the fast moving bright feature called Scooter and the little dark spot are visible.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்)
கண்டுபிடிப்பு நாள் 23 செப்டம்பர் 1846[1]
காலகட்டம்J2000
சூரிய சேய்மை நிலை30.33 AU
(4,540 Gm)
சூரிய அண்மை நிலை 29.81 AU
(4,460 Gm)
அரைப்பேரச்சு 30.110387 AU
(4,504.45 Gm)
மையத்தொலைத்தகவு 0.009456
சுற்றுப்பாதை வேகம் 164.8 yr
60,182 d
89,666 Neptunian solar days[3]
சூரியவழிச் சுற்றுக்காலம் 367.49 days[4]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 5.43 km/s[4]
சராசரி பிறழ்வு 256.228°
சாய்வு 1.767975° to ecliptic
6.43° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு
0.72° to invariable plane[5]
Longitude of ascending node 131.784°
Argument of perihelion 276.336°
துணைக்கோள்கள் 14
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 24,622±19 km[6][b]
நிலநடுக்கோட்டு ஆரம் 24,764±15 km[6][b]
3.883 Earths
துருவ ஆரம் 24,341±30 km[6][b]
3.829 Earths
தட்டையாதல் 0.0171±0.0013
புறப் பரப்பு 7.6183×109 km2[7][b]
14.98 Earths
கனஅளவு 6.254×1013 km3[4][b]
57.74 Earths
நிறை 1.0243×1026 kg[4]
17.147 Earths
5.15×10-5 Suns
அடர்த்தி 1.638 g/cm3[4][b]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்11.15 m/s2[4][b]
1.14 g
விடுபடு திசைவேகம்23.5 km/s[4][b]
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 0.6713 day[4]
16 h 6 min 36 s
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் 2.68 km/s
9,660 km/h
அச்சுவழிச் சாய்வு 28.32° (to orbit)[4]
வடதுருவ வலப்பக்க ஏற்றம் 19h 57m 20s[6]
299.3°
வடதுருவ இறக்கம் 42.950°[6]
எதிரொளி திறன்0.290 (bond)
0.41 (geom.)[4]
மேற்பரப்பு வெப்பநிலை
   1 bar level
   0.1 bar (10 kPa)
சிறுமசராசரிபெரும
72 K (−201 °C)[4]
55 K[4]
தோற்ற ஒளிர்மை 8.02 to 7.78[4][8]
கோணவிட்டம் 2.2–2.4″[4][8]
பெயரெச்சங்கள் Neptunian
வளிமண்டலம்[4]
அளவீட்டு உயரம் 19.7 ± 0.6 km
வளிமண்டல இயைபு 80 ± 3.2% நீரியம் (H2)
19 ± 3.2% ஈலியம் (He)
1.5 ± 0.5% மெத்தேன் (CH4)
~0.019% hydrogen deuteride (HD)
~0.00015% எத்தேன் (C2H6)
Ices:
அமோனியா (NH3)

water (H2O)
அமோனியம் ஐதரோசல்பைடு (NH4SH)

methane ice (?) (CH4•5.75H2O)

நெப்டியூன் (Neptune) சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன் (Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.[9] சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும். இது சூரியக் குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது. இதனைச் சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது.

நெப்டியூனின் பண்புகள்[தொகு]

நெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது.

இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதைக் காண முடிவதில்லை.

நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும்.

நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனைப் பின்பக்கமாகச்சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வறண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக்கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிப்பு[தொகு]

பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன். நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வில்லியம் எர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்புச் சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்புச் சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள். சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதைச் சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார். அதன் இயக்குநரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்குச் செவி மடுத்த இயக்குநர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டுச் சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன். இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனின் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டது.

இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன்,2011 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும்.

இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர்.

குறிப்புகள்[தொகு]

  1. Orbital elements refer to the Neptune barycentre and Solar System barycentre. These are the instantaneous osculating values at the precise J2000 epoch. Barycentre quantities are given because, in contrast to the planetary centre, they do not experience appreciable changes on a day-to-day basis from the motion of the moons.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Refers to the level of 1 bar (100 kPa) atmospheric pressure

உசாத்துணை[தொகு]

  1. Hamilton, Calvin J. (4 ஆகத்து 2001). "Neptune". Views of the Solar System. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2007.
  2. Yeomans, Donald K. "HORIZONS Web-Interface for Neptune Barycenter (Major Body=8)". JPL Horizons On-Line Ephemeris System. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2014.—Select "Ephemeris Type: Orbital Elements", "Time Span: 2000-01-01 12:00 to 2000-01-02". ("Target Body: Neptune Barycenter" and "Center: Solar System Barycenter (@0)".)
  3. Seligman, Courtney. "Rotation Period and Day Length". பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2009.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 Williams, David R. (1 செப்டம்பர் 2004). "Neptune Fact Sheet". NASA. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2007. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "The MeanPlane (Invariable plane) of the Solar System passing through the barycenter". 3 ஏப்ரல் 2009. Archived from the original on 2009-04-20. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2009. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help) (produced with Solex 10 பரணிடப்பட்டது 2008-12-20 at the வந்தவழி இயந்திரம் written by Aldo Vitagliano; see also Invariable plane)
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Seidelmann, P. Kenneth; Archinal, Brent A.; A'Hearn, Michael F. et al. (2007). "Report of the IAU/IAG Working Group on cartographic coordinates and rotational elements: 2006". Celestial Mechanics and Dynamical Astronomy 98 (3): 155–180. doi:10.1007/s10569-007-9072-y. Bibcode: 2007CeMDA..98..155S. https://archive.org/details/sim_celestial-mechanics-and-dynamical-astronomy_2007_98_3/page/155. 
  7. Munsell, K.; Smith, H.; Harvey, S. (13 November 2007). "Neptune: Facts & Figures". NASA. Archived from the original on 9 April 2014. பார்க்கப்பட்ட நாள் 14 August 2007.
  8. 8.0 8.1 Espenak, Fred (20 July 2005). "Twelve Year Planetary Ephemeris: 1995–2006". NASA. Archived from the original on 5 December 2012. பார்க்கப்பட்ட நாள் 1 March 2008.
  9. J. Toutain, Les cultes païens de l'Empire romain, vol. I (1905:378) securely identified Italic Neptune as a saltwater sources as well as the sea.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டியூன்&oldid=3877604" இலிருந்து மீள்விக்கப்பட்டது