நூபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்து மற்றும் நுபியா

நுபியா (/ˈnbiə, ˈnj-/) என்பது நைல் நதிக்கரையில் அமைந்த, எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கும் சூடான் நாட்டின் கர்த்தூம் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இப்பகுதி ஆபிரிக்காவின் முதன்மையான மற்றும் பழமையான ஆற்றங்கரை நாகரீகம் உருவான பகுதி ஆகும்.

தோற்றம்[தொகு]

எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் புதிய கற்காலம் பகுதியின் ஆரம்ப காலத்தில் நுபியன் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை வாடி ஹல்பா பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.[1] இப்பகுதி நுபியா என அழைக்கப்படுகிறது. இது புது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான கீழ் மற்றும் மேல் நுபியா குஷ் இராச்சியத்தின் பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள கர்த்தூம் பகுதியே நுபியா ஆகும்.[2]

நுபியாவின் பிரமிடு

எகிப்திய இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் எகிப்து பகுதியில் இருந்து நுபியா விடுபட்டது.[3] போர் வீரர்களான நுபியன் மக்கள் வில், அம்பு செய்வதில் வல்லவர்கள் ஆவர்.[4] நடுக்காலம் பகுதியில் நுபியன்கள் கிருத்துவம் மதத்தைத் தழுவி மூன்று நுபியன் இராச்சியங்களை அமைத்தனர். அவை முறையை வடக்கே நோபாடியா, மத்தியில் மகுரியா மற்றும் தெற்கே அலோடியா ஆகும்.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ancient Sudan~ Nubia: Burials: Prehistory". www.ancientsudan.org. Archived from the original on 2017-10-20. பார்க்கப்பட்ட நாள் 2019-05-01.
  2. "Nubia - ancient region, Africa".
  3. Draper, Robert. "Black Pharaohs". National Geographic.
  4. Bob Brier; Hobbs, A. Hoyt (2008). Daily Life of the Ancient Egyptians. Greenwood Publishing Group. பக். 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-35306-2. https://books.google.com/books?id=h1LsCh68d7kC&pg=PA249. 
  5. Sesana, Renato Kizito; Borruso, Silvano (2006) (in en). I Am a Nuba. Paulines Publications Africa. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789966081797. https://books.google.com/books?id=U88_xV5wOHoC&pg=PA26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூபியா&oldid=3613277" இலிருந்து மீள்விக்கப்பட்டது