நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 13°04′N 12°43′W / 13.067°N 12.717°W / 13.067; -12.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா
தேசியப் பூங்காவினூடாகப் பாயும் காம்பியா ஆறு
Map showing the location of நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா
Map showing the location of நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா
அமைவிடம்செனகல்
ஆள்கூறுகள்13°04′N 12°43′W / 13.067°N 12.717°W / 13.067; -12.717
பரப்பளவு9,130 km2 (3,530 sq mi)
நிறுவப்பட்டது1954, 1969
வகைஇயற்கை
வரன்முறைx
தெரியப்பட்டது1981 (5வது அமர்வு)
உசாவு எண்153
அரசு செனிகல்
பகுதிஆப்பிரிக்கா
அச்சுறுத்தநிலை2007–தற்காலம்

நியோக்கோலோ-கோபோ தேசியப் பூங்கா (ஆங்கில மொழி: Niokolo-Koba National Park, பிரெஞ்சு மொழி: Parc National du Niokolo Koba), கிழக்கு செனகலில் கினி-பிசாவு நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு உலக பாரம்பரியக் களமும், இயற்கைப் பாதுகாப்புப் பகுதியும் ஆகும்.

வரலாறு[தொகு]

1925ல் இப்பகுதி ஒரு ஒதுக்கப் பகுதியாக்கப்பட்டது.[1] 1954 சனவரி 1ம் தேதி இது செனகல் நாட்டின் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1969 இது விரிவாக்கப்பட்டு, 1981ல் ஒரு யுனெஸ்கோ உயிர்க்கோளக் காப்பகமாக உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.[2]

புவியியல்[தொகு]

நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா செனெகலின் உயர்நிலப் பகுதியில், கினியாவின் வடகிழக்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது. மேல் காம்பியா ஆறு இப்பகுதியூடாகவே பாய்கிறது. உயிர்க்கோளப் பூங்கா 9,130 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. பெரிய வளைவான வடிவத்தில் அமைந்துள்ள இது, கினி-பிசாவு எல்லைக்கு அண்மையில் மேல் காசாமான்சே/கோல்டா பகுதியில் தொடங்கி தாம்பாகவுண்டா பகுதிக்குள் கினியா எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவுவரை வருகிறது. இதன் உயரம் 16 மீட்டர் தொடக்கம் 311 மீட்டர் வரை காணப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. J. E. Madsen, D. Dione, A. S. Traoré, B. Sambou, "Flora and vegetation of Niokolo-Koba National Park, Senegal", p.214, in L. J. G. Van der Maesen, X. M. van der Burgt, J. M. van Medenbach de Rooy (eds.), The Biodiversity of African Plants. Springer, 1996, ISBN 978-0792340-95-9
  2. Niokolo-Koba National Park UNESCO Site. 1981