நாகசேனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னர் மெனாண்டரின் பௌத்தம் தொடர்பான கேள்விகளுக்கு நாகசேனர் விடையளித்தல்

நாகசேனர் (Nāgasena), சர்வாஸ்திவாத பௌத்தப் பிரிவின் நிறுவனரும், கி மு 150ல் காஷ்மீரில் பிறந்த [1][2] பாளி மொழி அறிஞரும் ஆவார்.

இந்தோ கிரேக்க மன்னர் மெனாண்டரின் பௌத்த சமயம் தொடர்பான கேள்விகளுக்கு, நாகசேனர் பதில் அளிக்கும் வண்ணம் அமைந்த, மிலிந்த பன்கா எனும் பாலி மொழி பௌத்த நூலை இயற்றியவர்.[3][3][4]

பௌத்த மெய்யியல் நூலான திரிபிடகத்தை, பாடலிபுத்திரத்தில், தான் ஒரு கிரேக்க பௌத்த பிக்குவிடமிருந்து கற்றதாக நாகசேனர், தான் இயற்றிய மிலிந்த பன்கா நூலில் குறித்துள்ளார். மேலும் கிரேக்க பௌத்த குருவின் வழிகாட்டுதலின் படி, தனக்கு ஞானம் ஏற்பட்டு, போதிசத்துவ நிலை அடைந்ததாக கூறுகிறார். மகாயான பௌத்தப் பிரிவில், நாகசேனர் 18 அருகதர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Xing 2005, ப. 26.
  2. Jestice 2004, ப. 621.
  3. 3.0 3.1 மிலிந்தனின் கேள்விகள்
  4. GLIMPSES OF KISHTWAR HISTORY BY D.C.SHARMA
  5. Scratched Ear Lohan: Nagasena

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகசேனர்&oldid=2711535" இலிருந்து மீள்விக்கப்பட்டது