நருஹித்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நருஹித்தோ
ஜப்பானியப் பேரரசர்
ஆட்சிக்காலம்1 மே 2019 – தற்போது
முன்னையவர்அக்கிஹித்தோ
வாரிசுஃபுமிஹித்தோ
பிரதமர்ஷின்சோ அபே
பிறப்புNaruhito (徳仁)
23 பெப்ரவரி 1960 (1960-02-23) (அகவை 64)
தோக்கியோ பேரரச அரண்மனை, தோக்கியோ, ஜப்பான்
துணைவர்
மசாகோ ஒவாடா (தி. 1993)
குழந்தைகளின்
பெயர்கள்
அய்கோ, இளவரசி டோஷி
சகாப்த name and காலங்கள்
ரெய்வா: 1 மே 2019 – தற்போது
மரபுஜப்பானியப் பேரரசக் குடும்பம்
தந்தைஅக்கிஹித்தோ
தாய்மிச்சிக்கோ சோடா
மதம்ஷிண்டோ

நருஹித்தோ (Naruhito, ஜப்பானிய மொழி: 明仁, பிறப்பு: 23 பிப்ரவரி 1960) ஜப்பான் நாட்டின் பேரரசர் ஆவார். இவரது தந்தை அக்கிஹித்தோ முடிதுறந்ததைத் தொடர்ந்து இவர் 1 மே 2019 நாளன்று செவ்வந்தி அரியணையை ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் ரெய்வா ஊழி தொடங்கியது. ஜப்பானியப் பாரம்பரிய ஆட்சிமுறை வம்சாவளியினர் வரிசையில் இவர் 126வது பேரரசர் ஆவார்.[1]

பிறப்பும் கல்வியும்[தொகு]

நருஹித்தோ, 23 பிப்ரவரி 1960இல் தோக்கியோ பேரரச அரண்மனையில் உள்ள மருத்துவமனையில் பிறந்தார்.[2] இவருக்கு 4 வயதான போது ஜப்பானில் மதிப்புமிக்க கக்குஷுயின் கல்விமுறையில் சேர்ந்து தொடக்கக்கல்வியைப் பயின்றார். பிறகு கக்குஷுயின் பல்கலைக்கழகத்தில் பயின்று மார்ச் 1982இல் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நருஹித்தோ, 9 சூன் 1993இல் மசாகோ ஒவாடா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1 டிசம்பர் 2001இல் இளவரசி அய்கோ பிறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Japan's new Emperor Naruhito pledges unity". BBC News. 1 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-02.
  2. "浩宮徳仁親王(現皇太子)誕生". Mainichi Shimbun. 23 February 1960 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224023754/http://showa.mainichi.jp/news/1960/02/post-9a3e.html. 
  3. Hills 2006, ப. 81
"https://ta.wikipedia.org/w/index.php?title=நருஹித்தோ&oldid=3217985" இலிருந்து மீள்விக்கப்பட்டது