தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research, NCAER) புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இலாபநோக்கற்ற பொருளியல் மதியுரையகம் ஆகும்.[1][2]

இதன் ஆளுமைக் குழுவின் தலைவராக நந்தன் நிலெக்கணியும் தலைமை இயக்குநராக முனைவர் சேகர் ஷாவும் உள்ளனர்.[1]

இது 1956இல் ஃபோர்டு அறக்கட்டளை, நிதி அமைச்சகம் மற்றும் டாட்டா​ சன்ஸ் ஆதரவுடன் நிறுவப்பட்டது. ஜவகர்லால் நேரு அக்டோபர் 31, 1959இல் இந்த வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Official Website
  2. "National Council of Applied Economic Research". Archived from the original on 2016-04-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.