தெரக்கு உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெரக்கு உள்ளான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
டெரெக் உள்ளான்

Kaup, 1829
இனம்:
X. cinereus
இருசொற் பெயரீடு
Xenus cinereus
(Güldenstädt, 1775)
வேறு பெயர்கள்

Tringa cinerea
Tringa terek

தெரக்கு உள்ளான் (Terek Sandpiper; Xenus cinereus) 24 செ.மீ. மெல்லிதாக நீண்டு மேல் நோக்கி வளைந்திருக்கம் அலகும். மஞ்சள் நிறக் கால்களும் கொண்டது. முகத்தின் பக்கங்களிலும் பின் கழுத்திலும் பழுப்புக் கோடுகள் இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் பழுப்பு நிறம் பின் கீழ்ப்பகுதியும் வெள்ளை நிறம்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

தெரக்கு உள்ளான்

ஆகத்து மாதத்தில் தமிழ் நாட்டுக்கடற்கரை சார்ந்த பகுதிகளுக்கு வலசை வரத் தொடங்கும். நன்னீர் நிலைகளில் அரிதாகவே காணக்கூடியது. கடற்கரை, சதுப்பு நிலங்கள், கரையோர உப்பங்கழிகள், ஆற்றுக் கழிமுகம் ஆகிய பகுதிகளிள் காணப்படும்.

உணவு[தொகு]

10 முதல் 15 வரையான பறவைகள் சிறு குழுவாக சிறு நத்தைகள், பூச்சிகள் ஆகியனவற்றை இரையாகத் தேடித் தின்னும். இவ்வாறு இரை தேடும் போது புதை மணலில் அலகினைக் கண்வரை உள்ளே செல்லும்படி நுழைக்கும் பழக்கம் உடையதாகையால் கீழ் அலகை ஒட்டியபகுதியும் மோவாயும் தூவிகளற்றுக் காணப்படும். பிடிக்கும் இரையைத் தண்ணீரில் அலசி சுத்தம் செய்த பின் விழுங்கும் பழக்கமும் இதனிடம் உள்ளது. அலை ஏற்றத்தின் போது உயர்ந்த மணல் திட்டுகளின் மீதோ பாறைகளின் மீதோ ஒற்றைக் காலில் நிற்கக் காணலாம். சதுப்பு நிலக்காடுகளில் மேயும் பறவைகள் மரங்களில் உயர அமர்ந்து ஓய்வு கொள்ளும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. " டெரெக் உள்ளான்". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரக்கு_உள்ளான்&oldid=3771433" இலிருந்து மீள்விக்கப்பட்டது