தென்னாபிரிக்க ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னாபிரிக்க ஒன்றியம்
Union of South Africa
Unie van Suid-/Zuid-Afrika
1910–1961
கொடி of தென்னாபிரிக்காவின்
கொடி
சின்னம் of தென்னாபிரிக்காவின்
சின்னம்
குறிக்கோள்: Ex Unitate Vires
(இலத்தீன்: ஒற்றுமையில் இருந்து, வலிமை}
நாட்டுப்பண்: Die Stem van Suid-Afrika
நிலைபொதுநலவாய அமைப்பு
தலைநகரம்கேப் டவுன் (சட்டப்படி)
பிரிட்டோரியா (நிர்வாக)
Bloemfontein (நீதி)
பேசப்படும் மொழிகள்ஆபிரிக்கான்ஸ், டச்சு, ஆங்கிலம்
அரசாங்கம்அரச்சியலமைப்பு முடியாட்சி
அரசி 
• 1952-1961
இரண்டாம் எலிசபெத்
ஆளுநர் 
• 1959-1961
சார்ல்ஸ் ரொபேர்ட்ஸ் சுவார்ட்
பிரதமர் 
• 1958-1961
ஹெண்ட்ரிக் வேர்வோர்ட்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
செனட்
அசெம்பிளி
வரலாறு 
• இணைப்பு
மே 31 1910
டிசம்பர் 11, 1931
• குடியரசு
மே 31 1961
பரப்பு
19612,045,320 km2 (789,700 sq mi)
மக்கள் தொகை
• 1961
18216000
நாணயம்தென்னாபிரிக்க பவுன்
முந்தையது
பின்னையது
கேப் காலனி
Colony of Natal
Orange River Colony
Transvaal
தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க ஒன்றியம் (Union of South Africa) என்பது தற்போதைய தென்னாபிரிக்கக் குடியரசின் முன்னாளைய அமைப்பாகும். இவ்வொன்றியம் மே 31, 1910 இல் முன்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளாயிருந்த கேப், நட்டால், டிரான்ஸ்வால், ஒரேஞ்சு தனி மாநிலம் ஆகியவற்றை இணைத்து இவ்வொன்றியத்தின் மாகாணங்களாக உருவாக்கப்பட்டது.

இது முதலில் ஒரு தன்னாட்சி உரிமையுள்ள நாடாக (dominion) அமைக்கப்பட்டு பின்னர் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது. இவ்வொன்றியம் மே 31, 1961 இல் கலைக்கப்பட்டு தென்னாபிரிக்கக் குடியரசு என்ற பெயரில் குடியரசானது.

சிறப்புகள்[தொகு]

கனடா, அவுஸ்திரேலியா போன்ற கூட்டமைப்புகள் போலல்லாமல் தென்னாபிரிக்க ஒன்றியம் ஒரு தனிநாடாக விளங்கியது. நான்கு குடியேற்ற நாடுகளினதும் நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட்டு அவை மாகாண அமைப்பாக மாற்றப்பட்டன. அசெம்பிளி, செனட் என இரு அவைகள் அமைக்கப்பட்டன. இவற்றின் உறுப்பினர்களை பொதுவாக நாட்டின் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையினத்தவர்களே தெரிவு செய்தனர்.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னாபிரிக்க_ஒன்றியம்&oldid=3217087" இலிருந்து மீள்விக்கப்பட்டது