திருக்குன்னத்து மகாதேவர் கோயில்
திருக்குன்னத்து மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் கஞ்சனியில் அமைந்துள்ள இந்தக் கோயில் திராவிடக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கோயில்கருவண்ணூர் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் கிழக்கு நோக்கி உள்ளார். பரசுராமர் இச்சிலையை அமைத்ததாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன.[1] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இந்த கோயில் ஒன்றாகும்.[2] [3]
கோயில் அமைப்பு
[தொகு]இங்குள்ள மூலவர் சிற்பம் பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.[4] அருகிலுள்ள கருவண்ணூர் ஆறு கோயிலைச் சுற்றியுள்ளது. அது சூழலுக்கு பசுமையைத் தருகிறது. இக்கோயில் மிகவும் பழமையானதாகும். கோயில் வளாகம் 2 ஏக்கரில் உள்ளது. இங்கு மகாதேவருக்கும் (சிவன்) விஷ்ணுவுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் திருச்சுற்று, மூலவர் சன்னதி உள்ளிட்டவை உள்ளன. இக்கோயில் கேரளா-திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
சிவன் கருவறை வட்ட வடிவில் உள்ளது. அது செப்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. அதில் இரு அறைகள் உள்ளன. விஷ்ணு கோயிலின் கருவறை சதுர வடிவில் கூடி வேயப்பட்டு, மேற்கு நோக்கி உள்ளது.
விழாக்கள்
[தொகு]மலையாள மாதமான தனுவில் இக்கோயிலின் வருடாந்திர விழா கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் திருச்சூர் - திரிப்ராயர் பேருந்து வழித்தடத்தில் கஞ்சனி சந்திப்பில் இருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[5]
மேலும் பார்க்கவும்
[தொகு]படத்தொகுப்பு
[தொகு]-
கோயிலின் பருந்துப்பார்வை
-
நுழைவாயில்
-
மூலவர் கருவறை
-
திருச்சுற்று
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thrikkunnu - Siva Temple - Abode of God Shiva On the Internet - Name of Hara encompass; World be free from Suffering".
- ↑ "108 Shiva temples of Kerala - Worshiped by Parasurama Information".
- ↑ "Welcome to Kerala Temples-108 Siva Temples".
- ↑ "108 Shiva Temples 64 Villages Built By Parashurama List".
- ↑ "Thrikkunnu - Siva Temple - Abode of God Shiva On the Internet - Name of Hara encompass; World be free from Suffering".