திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்
Sultan Mizan Zainal Abidin of Terengganu
Sultan Mizan Zainal Abidin
யாங் டி பெர்துவான் அகோங்
 திராங்கானு
2011-இல் மிசான் சைனல் ஆபிதீன்
மலேசியாவின் 13-ஆவது பேரரசர்
ஆட்சிக்காலம்13 டிசம்பர் 2006 - 12 டிசம்பர் 2011
முடிசூட்டுதல்26 ஏப்ரல் 2007
முன்னையவர்பெர்லிஸ் சுல்தான் சிராசுதீன்
(Sirajuddin of Perlis)
பின்னையவர்சுல்தான் அப்துல் ஆலிம்
பிரதமர்கள்
பிரதிநிதி ஆட்சி8 அக்டோபர் 2001 - 12 டிசம்பர் 2001
முன்னையவர்சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன்
பின்னையவர்பெர்லிஸ் சுல்தான் சிராசுதீன்
திராங்கானு சுல்தான்
ஆட்சிக்காலம்15 மே 1998 - தற்போது வரையில்
முடிசூட்டுதல்4 மார்ச் 1999
முன்னையவர்திராங்கானு சுல்தான் மகமூட்
முதலமைச்சர்கள்
பட்டியல்
  • வான் மொக்தார் அகமது
    அப்துல் அடி அவாங்
    இட்ரிசு ஜூசோ
    அகமத் சைட்
    அகமத் ரசிப் அப்துல் ரகுமான்
    அகமத் சம்சூரி மொக்தார்
பிறப்பு22 சனவரி 1962 (1962-01-22) (அகவை 62)
இசுதானா அல்-முக்தாபி, கோலா திராங்கானு, மலேசியா
துணைவர்
திராங்கானு சுல்தானா நூர் சகிரா (தி. 1996)
குழந்தைகளின்
#திருமணம் மற்றும் குடும்பம்
பட்டியல்
  • தெங்கு நாதிரா சகரா
    தெங்கு முகமது இசுமாயில்
    தெங்கு முகமது முவாசு
    தெங்கு பாத்திமதுசு சரா
பெயர்கள்
தெங்கு மிசான் சைனல் அபிதீன் இப்னி தெங்கு மகமூத்
பட்டப் பெயர்
சுல்தான் மிசான் சைனல் அபிதீன் இப்னி சுல்தான் மகமூத் அல்-முக்தாபி பில்லா சா
மரபுபெண்டகாரா வம்சாவளி
தந்தைதிராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன்
தாய்சரிபா நோங் பாத்திமா
மதம்இசுலாம்

திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் அல்லது சுல்தான் மிசான் சைனல் அபிதீன் இப்னி மகமூத் அல்-முக்தாபி பில்லா சா; (ஆங்கிலம்: Terengganu Sultan Mizan Zainal Abidin அல்லது Sultan Mizan Zainal Abidin; மலாய்: Sultan Mizan Zainal Abidin அல்லது Sultan Mizan Zainal Abidin ibni Almarhum Sultan Mahmud Al-Muktafi Billah Shah) (பிறப்பு 22 ஜனவரி 1962); என்பவர் மலேசியாவின் 13-ஆவது, பேரரசரும்; திராங்கானு மாநிலத்தின் 18-ஆவது அரசரும் ஆவார். 2006 முதல் 2011 சனவரி வரை மலேசியாவின் மாமன்னராகப் பதவி வகித்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன், கோலா திராங்கானுவில் உள்ள இசுத்தானா மசியாவில் (Istana Maziah) பிறந்தார். அவர் சுல்தான் மகமூத் அல்-முக்தாபி பில்லா சா (Sultan Mahmud Al-Muktafi Billah Shah) என்பவரின் இரண்டாவது மனைவியான சரிபா நோங் பாத்திமா அல்சாகோப் (Sharifa Nong Fatima Alsaggof) என்பவரின் மூத்த மகன் ஆவார்.

சரிபா நோங் பாத்திமாவின் குடும்பம் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்தது. சிங்கப்பூரின் நவீன முன்னோடிகளில் ஒருவரான சயீத் உமர் அல்சுனிட் (Sayidd Omar Aljunied) என்பவரின் குடும்பத்தின் வாரிசைச் சேர்ந்தவர் சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்.[1]

கல்வி[தொகு]

சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன், கோலா திராங்கானுவில் உள்ள சுல்தான் சுலைமான் தொடக்கப் பள்ளி (Sekolah Kebangsaan Sultan Sulaiman); சுல்தான் சுலைமான் இடைநிலைப்பள்ளி (Sekolah Menengah Sultan Sulaiman); ஆகிய பள்ளிகளில் படித்தார். பின்னர் ஆஸ்திரேலியாவின் கிலோங் இலக்கணப் பள்ளியில் (Geelong Grammar School) படித்தார். பின்னர் 1988-இல், லண்டனில் உள்ள அலையன்ட் அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் (Alliant International University) படித்தார்.

பின்னர் அவர் இங்கிலாந்தில் உள்ள சாண்ட்கர்சுட் இராணுவக் கல்லூரியில் (Royal Military Academy Sandhurst) படித்தார். 9 டிசம்பர் 1983-இல் ஓர் இராணுவ அதிகாரியாகப் படிப்பை முடித்தார்.

யாங் டி பெர்துவான் மூடா[தொகு]

சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன், 6 நவம்பர் 1979 அன்று திராங்கானு மாநிலத்தின் யாங் டி பெர்துவான் மூடாவாக (Yang di-Pertuan Muda) நியமிக்கப்பட்டார். 20 அக்டோபர் 1990 அன்று, திராங்கானுவின் சுல்தான் பிரதிரிதியாக (Regent of Terengganu) நியமிக்கப்பட்டார்.

1991 முதல் 1995 வரை, திராங்கானுவின் இசுலாம் மற்றும் மலாய் கலாசார மன்றத்தின் (President of the Council for Islam and Malay Culture) தலைவராக இருந்தார்.

1998 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி தன் தந்தையார் சுல்தான் மகமூத் (Sultan Mahmud) இறந்ததைத் தொடர்ந்து திராங்கானு சுல்தானாக நியமிக்கப் பட்டார். மார்ச் 4, 1999 அன்று திராங்கானுவின் 17-ஆவது சுல்தானாக முடிசூட்டப் பட்டார்.

நிர்வாகம்[தொகு]

2008 மந்திரி பெசார் நியமன நெருக்கடி[தொகு]

2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில்; பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணி, திராங்கானு மாநில சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்றது. அடுத்தக் கட்டமாகத் திராங்கானு மாநிலத்தில், தன் பாரிசான் நேசனல் கூட்டணியின் சார்பில் மந்திரி பெசார் (முதல்வர்) (Menteri Besar) ஒருவரை நியமிக்க முனைப்பு காட்டியது.

அதே வேளையில் மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் கீழ் இருந்த நடுவண் அரசாங்கம், புதிய திராங்கானு மாநில அரசாங்கத்தை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டியது. 2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், திராங்கானு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேரின் முழு ஆதரவைப் பெற்ற இட்ரிசு ஜூசோ (Idris Jusoh) என்பவரை மந்திரி பெசார் பதவிக்குப் பரிந்துரைத்தது.[2]

இருப்பினும், மார்ச் 22 அன்று, திராங்கானு சுல்தானின் அரசியலமைப்பு உரிமையின் கீழ் (Sultan's Constitutional Right), திராங்கானு சுல்தானின் அலுவலகம், இட்ரிசு ஜூசோவுக்குப் பதிலாக, கிஜால் சட்டமன்ற உறுப்பினர் (Kijal Assemblyman) அகமத் சையிது (Ahmad Said) என்பவரை மந்திரி பெசார் பதவிக்கு நியமிப்பதாக அறிவித்தது.

தீர்வு[தொகு]

அதன் பின்னர், அகமத் சையிது, மந்திரி பெசார் பதவிக்கு நியமிக்கப்பட்டது மலேசிய அரசியலமைப்பிற்கு முரணானது என்று பிரதமர் அப்துல்லா அகமது படாவி அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலேசியப் பிரதமர் அலுவலகத்தின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறினார்.[3]

மார்ச் 26 அன்று, பிரதமர் அப்துல்லா அகமது படாவியும் மற்றும் சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் அவர்களும் இசுதானா நெகாராவில் சந்தித்தனர். திராங்கானுவின் மந்திரிபெசாராக சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் நியமித்ததைப் பிரதமர் ஏற்றுக் கொண்டார். சுல்தானிடம் மன்னிப்பும் கேட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]