தியாடர் சுலட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாடர் சுலட்ஸ்
தியாடர் சுலட்ஸ்
பிறப்பு(1902-04-30)ஏப்ரல் 30, 1902
ஆர்லிங்டன்,தெற்கு டகோட்டா, அமெரிக்கா
இறப்பு26 பெப்ரவரி 1998(1998-02-26) (அகவை 95)
இவான்சுடன்,இலினொய், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
நிறுவனம்
துறைவேளாண்மை பொருளியல்
கல்விமரபுசிகாகோ பொருளியல் பள்ளி
பயின்றகம்
  • தெற்கு டகோட்டா மாநில பல்கலைக்கழகம்
  • விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம்
தாக்கமுள்ளவர்டாக்டர் காலே ஜான்சன்
விருதுகள்பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1979)
ஆய்வுக் கட்டுரைகள்

தியாடர் வில்லியம் சுலட்ஸ் (Theodore William "Ted" Schultz) (30 ஏப்ரல் 1902 - 26 பிப்ரவரி 1998) என்பவர் ஒரு அமெரிக்க பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர் மற்றும் சிகாகோ பொருளியல் பள்ளியின் பேராசிரியர், பொருளியல் கோட்பாடுகளை வகுத்து அதை புகழ் பெறச் செய்தவர் என்று பன்முகங்களை கொண்டவர். 1979 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றப் பிறகு இவர் அமெரிக்காவில் தேசிய அளவில் அறியப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தியாடர் சுலட்ஸ் 30 ஏப்ரல் 1902 ஆம் தேதி அன்று பத்து மைல்கள் தொலைவில், வடமேற்கு பாட்ஜர், தெற்கு டகோட்டாவில் ஒரு 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய பண்னையில் பிறந்தார். சுலட்ஸ் எட்டாவது படிக்கும்போது அவரது தந்தை ஹென்றி இவரை கிங்ஸ்பெரி கவுண்டி பள்ளியில் இருந்து நிறுத்த முடிவு செய்தார். ஏனெனில் தனது மூத்த மகனான சுலட்ஸ் மேற்கொண்டு உயர் கல்வி பயின்றால் தனது பண்னை வேலைகளை செய்ய விரும்ப மாட்டார் என்று நினைத்தார். இதன் காரணமாக சுலட்ஸ் முறையான ஒரு உயர் நிலை கல்விப் பெறவில்லை. சுலட்ஸ் பின்னர் தெற்கு டகோட்டாவில் உள்ள ஒரு வேளாண்மை பள்ளியில் மூன்று ஆண்டு படிப்பில் சேர்ந்து படித்தார். இந்தப் பள்ளி, ஒரு வருடத்தில் குளிர்காலத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே நடைபெறும். இதன் பின்னர் இளங்கலை படித்தார். 1928 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1959 ஆம் ஆண்டு கெளரவ முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1927 இல் பட்டம் பெற்றார், பின்னர் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக் கழகத்தில் 1930 ஆம் ஆண்டில் பெஞ்சமின் ஹெச். ஹிபர்ட்டின் கீழ் தனது வேளாண் பொருளியல் துறையில் முனைவர் பட்டம் பின்வரும் ஆராய்ச்சி கட்டுரைக்காகப் பெற்றார். அவரது கட்டுரையின் தலைப்பு "சீர்-பயிர் தானியங்களுக்கு இடையே உள்ள கட்டண விலை மற்றும் கட்டண விலை ஆய்வுகளின் சில கோட்பாட்டு அம்சங்களின் வளர்ச்சி."[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaars, Marvin A. (1972). "The Story of The Department of Agricultural Economics: 1909–1972" (PDF). Archived from the original (PDF) on 2020-04-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாடர்_சுலட்ஸ்&oldid=3435602" இலிருந்து மீள்விக்கப்பட்டது