தாய்ப் பன்றி வடிவம்
தாய்ப் பன்றி வடிவம் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்றாகும். ஏனைய வடிவங்கள் போலின்றி இவ்வடிவிலும், சரபேசுவர் வடிவிலும் மட்டுமே சிவன் மிருக வடிவில் காணப்படுகிறார். வியாழன் பகவானின் கோபத்திற்கு ஆளான பன்னிரு வெள்ளாளர்கள் பன்றிக் குட்டிகளானார்கள். தாயின்றி இருந்தமையால், பசியால் வாடினர். அவர்களின் பசியைப் போக்க சிவபெருமான் தாய்ப்பன்றியாக வடிவெடுத்து அவர்களின் பசியைப் போக்கினார். சொல்லிலக்கணம்[தொகு]வேறு பெயர்கள்[தொகு]தோற்றம்[தொகு]இவ்வடிவத்தின் தோற்றம் மனித பெண்ணுடலும், தலை பன்றியின் வடிவமாகவும் காணப்படுகிறது. உருவக் காரணம்[தொகு]சுகலன் எனும் வேளாளனின் பன்னிரு புதல்வர்கள் வேடர்களுடன் இணைந்து காட்டிற்குள் சென்றனர். அங்கு தவத்திலிருந்து வியாழன் பகவானை எள்ளி நகையாடினர். எனவே கோபம் கொண்ட பகவான், நீங்கள் பன்றிக்குட்டிகளாக பிறந்து பெற்றோரை இழந்து வாடுவீர்கள் எனச் சாபம் தந்தார். பன்னிருவரும் பயந்து சாபத்திலிருந்து விடுதலைப் பெறுவதை அறிய முற்பட்டனர். அதற்குப் பகவான் சிவபெருமானே தங்களுக்குத் தாயாக வந்து முத்தி தருவார் என்று கூறினார். பகவானின் கூற்றுப்படி பன்னிருவரும் பன்னிக்குட்டிகளாகப் பிறந்தனர். பாண்டிய மன்னன் வேட்டையாட காட்டுப் பகுதிக்கு வரும் போது அவனுடைய வீரர்களால் இப்பன்றிக்குட்டிகளின் பெற்றோர் இறந்தனர். பெற்றோரை இழந்து பாலுக்கு வாடிய பன்றிக்குட்டிகளைக் கண்டு சிவபெருமானே தாய்ப்பன்றியாக வடிவெடுத்து வந்தார். பின் அவைகளுக்குப் பால் தந்து பசியாற்றினார். சிவபெருமான் பன்றிக்குட்டிகளுக்காகத் தாய்ப்பன்றியாக அவதரித்தமையைச் சைவ சமய நூல்கள் குறிப்பிட்டுள்ளன. இலக்கியங்களில்[தொகு]....காட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கி யீசன் - மாணிக்கவாசகர் - எட்டாம் திருமுறை 43 திருவார்த்தை பாடல் எண் : 6 [1] கோயில்கள்[தொகு]முருகனின் வடிவம்[தொகு]தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலின் தலப் புராணத்தில் சோழ அரசன் ராஜேந்திரன் வேட்டையாடும் பொழுது பாலூட்டிக் கொண்டிருந்த தாய்ப்பன்றியை தவறுதலாகக் கொன்றதாகவும், அதனைப் பின் அறிந்த அரசன் பாலின்றி தவிக்கும் பன்றிக் குட்டிகளைக் கண்டு மனம் வருத்தியதாகவும் குறிப்புள்ளது. மேலும் அரசன் இறைவனான முருகப்பெருமானை வேண்டிட, முருகன் தாய்ப்பன்றியாக தோன்றி பன்றிக் குட்டிகளின் பசியாற்றியதாக உள்ளது. [2] தான் தொடுத்த அம்பினால் இறந்த தாய்ப் பன்றி கண்டு வருந்திய வேடன், இறைவனை வேண்ட முருகன் குட்டிப் பன்றிகளுக்கு பால் கொடுத்தாக கூறப்படுகிறது. [3] இவற்றையும் காண்க[தொகு]ஆதாரம்[தொகு]வெளி இணைப்புகள்[தொகு] |