தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி
பிறப்புதத்தோபந்த் பாபுராவ் தெங்காடி
(1920-11-10)10 நவம்பர் 1920
ஆர்வி கிராமம், வார்தா மாவட்டம், மகாராஷ்டிரம்
இறப்பு14 அக்டோபர் 2004(2004-10-14) (அகவை 83)
புனே, மகாராஷ்டிரம்
இறப்பிற்கான
காரணம்
மகாநிர்வாணம் (महानिर्वाण)
கல்லறைராம்நரேஷ் பவன், தில்லி
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்தெங்காடிஜி, ராஷ்டிர ரிஷி
கல்விB.A., LL.B
படித்த கல்வி நிறுவனங்கள்மோரிஸ் கல்லூரி, நாக்பூர்
அறியப்படுவதுஇந்துத்துவா கொள்கை
நிறுவனத் தலைவர்; பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிசான் சங்கம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம் முதலியன
இறக்கும் வரை 14 அக்டோபர் 2004 முடிய ஆர் எஸ் எஸ் முழு நேர பிரச்சாரகர்
சமயம்இந்து சமயம்
பெற்றோர்பாபுராவ் தாஜீபா தெங்காடியா (தந்தை), ஜானகிதேவி (தாய்)
விருதுகள்பத்ம விபூசண் விருதுதை பெற மறுத்து விட்டார்.
கையொப்பம்
வலைத்தளம்
Official Website

தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி அல்லது தெங்காடி (Dattopant Bapurao Thengadi), (10 நவம்பர் 1920 – 14 அக்டோபர் 2004) இந்துத்துவா கருத்தியல் கொண்ட இந்து த்த்துவ்வாதி, இந்திய தொழிற்சங்கத் தலைவர், மற்றும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை நிறுவியவர். தெங்காடி, மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டம், ஆர்வி கிராமத்தில் பிறந்தவர். இறக்கும் வரை ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முழு நேரப் பிரச்சாரகராக இருந்தவர். .[1][2][3] எளிமையான வாழ்வு, கல்வியில் புலமை, ஆழ்ந்த சிந்தனை, எண்ணங்களில் தெளிவு, நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி, வீரம், இலக்கை அடைவதில் அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய நற்பண்புகளை, வருங்கால இளைஞர்களுக்கு விட்டுச் சென்றார் தெங்காடி.[4]

நிறுவிய நிறுவனங்கள்[தொகு]

தெங்காடி, பல அமைப்புகளை நிறுவியதுடன் அவைகளை ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுத்தார். தெங்காடி நிறுவிய அமைப்புகளில் சில;

  1. பாரதிய தொழிலாளர் சங்கம், ஆண்டு 1955[5]
  2. பாரதிய விவசாயிகள் சங்கம், ஆண்டு 1979[6]
  3. சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (1991),[7]
  4. அகில பாரத வித்தியார்த்தி பரிசத்

நாடாளுமன்றத்தில்[தொகு]

தெங்காடிய, 1964 – 1976 முடிய இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.[8]

சொற்பொழிவு[தொகு]

  1. Youtube Speeches of Dattopant Thengadi

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. De Facto Official Website- Dattopant Thengadi பரணிடப்பட்டது 2012-09-28 at the வந்தவழி இயந்திரம்
  2. Swadeshi Jagaran Manch
  3. Bharatiya Kisan Sangh
  4. Bharatiya Mazdoor Sangh
  5. Shri S.Gurumurthy பரணிடப்பட்டது 2015-08-01 at the வந்தவழி இயந்திரம்