டோவர் நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோவர் நீரிணையின் அமைவிடம்

டோவர் நீரிணை ஆங்கிலக் கால்வாயின் குறுகலான பகுதியில் அமைந்துள்ள நீரிணையாகும். பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைந்துள்ள இந்நீரிணை ஆங்கிலக் கால்வாயையும் வடகடலையும் இணைக்கிறது. அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் வட கடல், பால்டிக் கடலுக்குமிடையிலான பெருமளவு கடற்போக்குவரத்து இந்த நீரிணையினூடாகவே நடைபெறுகிறது. தினமும் ஏறத்தாழ 400 வர்த்தகக் கடற்கலன்கள் இந்நீரிணையைப் பயன்படுத்துகின்றன. 1990கள் வரை இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையிலான போக்குவரத்து இந்நீரிணையைக் கடந்தே பெரும்பாலும் அமைந்தது. இப்பொழுது இந்நீரிணைக்கு 45 மீ கீழே செல்லும் சுரங்கப்பாதை இந்நாடுகளை இணைக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோவர்_நீரிணை&oldid=1348744" இலிருந்து மீள்விக்கப்பட்டது