டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோரத்தியா கிளம்ப்கே இராபர்ட்சு
Dorothea Klumpke Roberts
பிறப்பு(1861-08-09)ஆகத்து 9, 1861
சான் ஃபிரான்சிசுகோ
இறப்புஅக்டோபர் 5, 1942(1942-10-05) (அகவை 81)
சான் ஃபிரான்சிசுகோ
துறைவானியல்
பணியிடங்கள்பாரிசு, ஃபிரான்சு; சுசெக்சு, இங்கிலாந்து
கல்வி கற்ற இடங்கள்சோர்பான்
ஆய்வேடுகார்க்கோளின் கிடைவரை ( L'étude des Anneaux de Saturne) (1893)
விருதுகள்ஃபிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம்எனும் அரசுக் கல்விக்கழகம் வழங்கிய Chevalier de la Légion d'Honneur

டோரத்தியா கிளம்ப்கே இராபர்ட்சு (Dorothea Klumpke Roberts, ஆகத்து 9, 1861 – அக்டோபர் 5, 1942) ஒரு அமெரிக்க வானியலாளர். இவர் பாரிசு வான்காணகத்தில் அளவைகள் வாரியத்தின் இயக்குநராக இருந்தார். பிறகு இவர் செவாலியே தெ லா லீஜன் டி ஆன்னியூ(ர்)ராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வாழ்க்கை[தொகு]

டோரத்தியாவின் தந்தை ஜெரார்டு கிளம்ப்கே (1825–1917) ஒருசெருமானியர். இவர் கலிபோர்னியா பொன் தேட்டத்தின்போது 1850 இல் கலிபோர்னியாவுக்கு வந்தவர். பின் இவர் நிலபுல விற்பனையில் வல்லுநராக விளங்கினார். இவர் டோரத்தியா மிதில்டா தோல்லியை மணந்தார். இவர்களுக்கு ஐந்து பெண்களும் இருஆண்களும் பிறந்தனர். டோரத்தியா 1877 இல் பிரான்சின் பாரிசு நகருக்குப் புலம்பெயர்ந்தார். இவரது நான்கு தங்கையரும் செருமனியிலும் சுவிட்சர்லாந்திலும் பள்ளியில் சேர்ந்தனர். மேலும் அவர்கல் அனைவரும் நல்ல பணியில் சேர்ந்தனர்:அன்னா எலிசபெத் கிளம்ப்கே சிறந்த ஓவியர். பிரெஞ்சு விலங்கு ஓவியரானௌரோசா பானியூரின் நண்பர். ஜூலியா நல்ல வயலின் இசைப்பாலர். மதில்டா மர்மோண்டெல்லின் மாணவரும் சிறந்த பல்லிய இசைப்பாளரும் ஆவார். நரம்பியலாளரான ஆகத்தா தன் கணவரான மருத்துவர் யோசாப் யூல்சு திழெரைன் உடன் இணைந்து மருத்துவ மனை நடத்தி பல ஆய்வுரைகளை வெளியிட்டுள்ளார்.

டோரத்தியா பாரிசு பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் இசையிலும் தேர்ச்சி பெற்றார். இருந்தாலும் பிறகு இவர் வானியல் துறைக்குத் திரும்பினார். வானியலில் இளவல் பட்டத்தை 1886 இலும் முனைவர் பட்டத்தை இ893 இலும் பெற்றார். பின்னர் 1887 இல் பாரிசு வான்காணகத்தில் பணியில் சேர்ந்தார். இங்கே இவர் குவில்லௌமே பிகௌர்தான், இலிப்போ சுலோஃப், அகியோருடன் பணிபுரிந்தார். பிறகு இவர் முன்னோடி வானொளிப்பட வல்லுநர்களான பௌல் என்றி, பாசுபர் ஃஎன்றி ஆகியோருடனும் பணிசெய்தார். இவ்விருவரும் 34 செ.மீ ஒளிவிலக்கியைப் பயன்படுத்தி சிறுகோள்களையும் கோள்களையும் படம்பிடித்தனர். இங்கே டோரத்தியாவின் பணி விண்மீன் இருப்புகளை அளப்பதும் விண்ணொளிப்படங்களை உருவாக்குவதும் விண்மீன் கதிர்நிரல்களையும் விண்கற்களையும் ஆய்வதும் ஆக இருந்தது

பணிகள்[தொகு]

சர் டேவிட் ஜில் 1886 இல் வானக அட்டவணை ஒன்றை முன்மொழிந்தார். இந்த திட்டம் அன்றைய பாரிசு வான்காணக இயக்குநரான அமேதி மவுசேழ் அவர்களைக் கவரவே அவர் இதற்காக பன்னாட்டு கருத்தரங்கொன்றை பாரிசில் நடத்த விழைந்தார. இதனால் கார்த்தே தூ சீ திட்டம் உருவானது. இத்திட்ட்த்தின் வழியாக 14 ஆம் பொலிவுடைய விண்மீன்கள் உட்பட வான்வெளி முழுவதையும் ஒளிப்படம் எடுக்கக் கருதப்பட்டது. பாரிசு வான்காணகம் இதில் பெரும்பங்காற்ற முடிவு செய்தது. மேலும் கூடியமட்டும் 11 ஆம் பொலிவுடைய விண்மீன்களின் அட்டவணையை உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டது.

தான் ஒரு பெண்ணாக இருந்தும் 50 ஆடவரின் போட்டிக்கிடையிலும் டோரத்தியா பாரிசு வான்காணக அளவையியல் குழும இயக்குநரானார்.

இவ்ர்1896 இல் நார்வே கப்பலன நோர்சு கிங்கில், 1896 ஆகத்து 9 இன் சூரிய ஒளிமறைப்பை நோக்கிட, நார்வேவுக்குப் பயணமானார். ஒளிமரைப்பு நோக்கீடு வெற்றிபெறாவிட்டாலும் அவரது வாழ்வில் காதல் இடைமறிக்கலானது. அங்கே இவர் 67 அகவையினரான அய்சக் இராபர்ட்சைச் சந்தித்தார். இராபர்ட் ஒரு தொழிமுனைவோராக இருந்து வானியல் வல்லுனராகியவர். மேலும் அவர் மனைவி இழந்தவராக இருந்துள்ளார். இவர் வானொளிப்படக் கலையில் முன்னொடியாகத் திகழ்ந்தவர். இவர் பாரிசு கார்த்தே தூ சீ கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார்.இவர் தனி வான்காணகமும் நிறுவியிருந்தார். இதில் 50 செ.மீ ஓலித்தெறிப்பியும் ஒளிப்படக் கருவியும் அமைந்திருந்தன. மேலும் இதில் தாமசு குக்கின் 13 செ.மீ ஒளிவிலக்கியும் இருந்த்து.

வானியலாளர்கள் 1899 இல் இன்று இலியோனிடுகள் எனப்படும் வால்வெள்ளிப் பொழிவு நிகழும் என எதிர்பர்த்தனர். பிரான்சு டோரத்தியா கிள்ம்கேவை வளிமக் குமிழிக்கலனில் பறந்து சென்று இப்பொழிவை ஆய்வு செய்ய தேர்வி செய்தது. ஆனால் அப்பொழிவு எதிர்பார்த்தபடி நிகழவில்லை.

சந்தித்த ஐந்தாண்டுக்ட்குப் பின்னர் அய்சக்கும் டோரத்தியாவும் திருமணம் செய்து கொண்டு சுசெக்சு வீட்டில் தங்கினர். அய்சக்குடன் இருக்க டோர்த்தியா தன் பாரிசு வான்கணகப் பதவியில் இருந்து விலகினார். எர்ழ்செல் ஒண்முகில் பரப்பில் உள்ள அனைத்து 52 பகுதிகளையும் ஒளிப்படம் எடுக்கும் திட்டத்தில் இவர் அய்சக்குக்கு துணைபுரிந்தார். 1904 இல் அய்சக் இறந்துவிடவே அவர்களது திருமணம் சிறிது காலத்துக்குள்ளேயே முடிவுற்றது. அய்சக்கின் வான்காணகமும் கணிசமான சொத்துகளும் டோரத்தியாவுக்கூக் கிடைத்தன.

டோரத்திய சுசெக்சு வீட்டிலேயே தங்கி திட்டமிட்டபடி 52 பகுதிகளையும் ஒளிப்படம் எடுத்தார். பிறகே இவர் தாயுடனும் தங்கை அன்னாவுடனும் தங்க சாட்டௌ உரோசா பெனியூருக்குச் சென்றார். அப்போது தான் எடுத்த அனைத்து ஒளிப்படங்களையும் உடன் கொண்டு சென்றார். பின்னர் பாரிசு வான்காணகத்துக்கு வந்து ஒளிப்படங்களையும் அய்சக்கின் குறிப்புகளையும் 25 ஆண்டுகளாக ஆழ்ந்து ஆய்வு செய்தார். ஆய்வு முடிவுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இவர் 1929 இல் "அய்சக் இராபர்ட்டின் 52 பகுதிகட்கான அட்டவணை, எர்ழ்செல் ஒண்முகில் புலங்களுக்கான வழிகாட்டி" என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலுக்காக, இவருக்கு 1932 இல் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்தால் பவுல் ஃஎல்பிரான்னர் பரிசு தரப்பட்டது.

பிறகு பல ஆண்டுகளுக்கு உடல்நலமின்றி இருந்து டோரத்திய கிளம்ப்கே 1942 அக்டொபர் 5இல் இறந்தார்.

தகைமைகள்[தொகு]

இவர் 1934 ஃபிப்ரவரி 22இல் ஃபிரெஞ்சு குடியரசுத் தலைவரால் Chevalier de la Légion d'Honneurஎனும் விருது வழங்கப்பட்டார். விருதுபெற்ற சில நாட்களுக்குள் இவரும் அன்னாவும் சான்ஃபிரான்சிசுகோவுக்கு சென்றனர். பிறகு வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்கியிருந்தார். இவர் பாரிசு வான்காணகத்திற்கும் பசிபிக் வானியல் கழகத்திற்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்கும் வளரும் வானியலாளர்களுக்குத் தகவளிக்க பெருங்கொடை நல்கினார். சிறுகோள்கள் 339 டோரத்தியா and 1040 கிளம்ப்கே ஆகியவை இவர் நினைவாகப் பெயரிடப்பட்டன. கிளம்ப்கே- இராபட்சு விருது பசிபிக் வானியல் கழகத்தால் இவரது நினைவாக வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]