டி. எச். லாரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. எச். லாரன்ஸ்
பிறப்புடேவிட் ஹெர்பர்ட் லாரன்ஸ்
(1885-09-11)11 செப்டம்பர் 1885
ஈஸ்ட்வுட், நாட்டிங்ஹாம்,இங்கிலாந்து
இறப்பு2 மார்ச்சு 1930(1930-03-02) (அகவை 44)
வென்ஸ், பிரான்ஸ்
அடக்கத்தலம்D. H. Lawrence Ranch, Taos, New Mexico
தொழில்கவிஞர், புதினவியலாளர்
தேசியம்பிரித்தானியர்
கல்வி நிலையம்நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்
காலம்1907–1930
வகைநவீனத்துவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • புதினங்கள்:
    சன்ஸ் அண்ட் லவ்வர்
    தெ ரயின்போ
    வுமன் இன் லவ்
    ஜான் தாமஸ் மற்றும் லேடி ஜேன்
    சாடர்லீயின் காதலி
  • சிறுகதைகள்:
    கிறிஸ்சாந்தமசின் வாசம்
    கன்னியும் நாடோடியும்

டேவிட் ஹெர்பர்ட் லாரன்ஸ் (David Herbert Lawrence (செப்டம்பர் 11, 1885மார்ச் 2, 1930) ஆங்கில எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.[1] இவரின் பெரும்பாலான படைப்புகள் தொழில்மயமாதல் மற்றும் நவீனமயமாதல் போன்றவற்றினால் ஏற்படும் மனிதத்தன்மையற்ற செயல்களினைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளன. மற்ற சில படைப்புகள் பாலியல், பலம், தன்னிச்சையான இயல்பு, உள்ளுணர்வுகள், மனநலம் போன்றவற்றினை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளன.

லாரன்சின் கருத்துக்கள் அவருக்கு அதிகமான எதிரிகளையே பெற்றுத் தந்தது. மேலும் இவரின் படைப்புகள் தணிக்கைக்கும், மத ஒறுப்புக்கும் உள்ளாக்கப்பட்டன. இவரின் படைப்பாக்கத் திறன் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டன. தன்னுடைய வாழ்க்கையின் இரண்டாவது பாதியில் நாடுகடத்தப்பட்டார். அதனைப் பற்ரி குறிப்பிடுகையில் அது ஒரு வெங்கொடுமையான புனிதப்பயணம் என்றார்.[2] இ. எம். பிராஸ்டர் இவரின் இறங்கல் பற்றி குறிப்பிடுகையில் எங்கள் தலைமுறைக் கவிஞர்களிலேயே மிகச்சிறந்த கற்பனைத்திறன் கொண்ட கவிஞர் எனக் குறிப்பிட்டார்.[3] பெர்ட்ரண்டு ரசல் குறிப்பிடுகையில் இவர் ஒரு அனைவருக்கும் முன்மாதிரியான ஜெர்மானிய பாசிசவாதி எனக் குறிப்பிட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டி. எச். லாரன்ஸ் செப்டம்பர் 11, 1885 இல் ஆர்தர் ஜான் லாரன்ஸ் மற்றும் லிதியா போர்தல் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை பிரின்ஸ்லி கோலிரியில் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்த்துவந்தார், தாய் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்தார். ஆனால் குடும்பத்தின் நிதிச்சுமை காரணமாக பின்னல் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார்.[4] லாரன்ஸ் தனது ஆரம்பகாலங்களில் நாட்டிங்ஹாம்ஷயரில் உள்ள நிலக்கரிச் சுரங்க நகரமான ஈஸ்ட்வுட்டில் வாழ்ந்தார்.

இவர் பிறந்த விக்டோரியா தெருவில் உள்ள எண்:8 அ, வீடானது தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இவரின் ஆரம்பகால படைப்புக்களின் கருத்துக்களானது அவரின் பெற்றோர்களின் பணி செய்யும் இடத்தின் பின்புலங்களில் இருந்து அமைந்தது. தனது ஆரம்பகாலங்களில் வடக்கு ஈஸ்ட்வுட்டில் உள்ள ஷெர்வுட் காடுகளில் சுற்றித்திரிந்தார். அதுவே பிற்கால இவரின் படைப்புகளில் இயற்கையினை பாராட்டுவதற்கு அடிப்படையாக அமைந்தது. இவரின் பெரும்பாலான புதினங்களில் இந்தப்பகுதியினை எனது இதயத்தின் நாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "டி. எச். லாரன்ஸ் கவிஞர்".
  2. "It has been a savage enough pilgrimage these last four years" Letter to J. M. Murry, 2 February 1923.
  3. Letter to The Nation and Atheneum, 29 March 1930.
  4. "The Life and Death of author, David Herbert Lawrence". Archived from the original on 2002-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எச்._லாரன்ஸ்&oldid=3858227" இலிருந்து மீள்விக்கப்பட்டது