ஜேம்சு பிராட்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்சு பிராட்லே
பிறப்புமார்ச்சு 1693
செர்போர்ன், கிளவுசெசுடெர்சயர், இங்கிலாந்து
இறப்பு13 ஜூலை 1762 (அகவை 69)
சால்போர்டு, கிளவுசெசுடெர்சயர், இங்கிலாந்து
தேசியம்பெரும்பிரித்தானியா
துறைவானியல்
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]]
ஆழ்சுமோலீன் அருங்காட்சியகம்
கல்வி கற்ற இடங்கள்பால்லியோல் கல்லூரி, ஆக்சுபோர்டு
அறியப்படுவதுஒளிப்பிறழ்வு
அரசு வானியலாளர்
விருதுகள்கோப்ளே பதக்கம், 1748

ஜேம்சு பிராட்லே (James Bradley) (மார்ச்சு 1693 - 13 ஜூலை 1762)ஓர் ஆங்கிலேய வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் 1742 இல் இருந்து எட்மண்டு ஆல்லேவுக்குப் பின்னர் அரசு வானியலாளராக இருந்துள்ளார் . இவர் வானியலில் இரு கண்டுபிடிப்புகளான ஒளிப்பிறழ்வு (1725–1728), புவித் தலையாட்டம் (1728–1748) ஆகிய கண்டுபிடிப்புகளுக்காகப் பெயர்பெற்றவர். இந்த இருகண்டுபிடிப்புகளும் அந்நூற்றாண்டின் மதிநுட்பமும் உயர்பயனும் மிக்க கண்டுபிடிப்புகளாக வானியல் வரலாற்று ஆசிரியரும் கணிதவியல் வானியலாளரும் பாரிசு வான்காணக இயக்குநரும் ஆகிய ழீன் பாப்திசுத்தே ஜோசப் தெலாம்பர், தனது 18 ஆம் நூற்றாண்டு வானியல் வரலாற்று நூலில் (1821) குறிப்பிடுகிறார். ஏனெனில், பிராட்லேவின் இந்த இரண்டு கண்டுபிடிப்புகள் தாம் புத்தியல் வானியலைத் துல்லியமாக்கியவை. இந்த இருசேவைகள் பிராட்லேவுக்கு இப்பார்க்கசுவுக்கும் கெப்ளருக்கும் பின்னால் வந்த எக்காலத்திலும் எந்நாட்டிலும் தோன்றிய எவரினும் மிகப்பெரும் வானியலாளராக புகழ் ஈட்டித் தந்தது. .[1]


வாழ்க்கை[தொகு]

பிராட்லே 1693 மார்ச்சில் வில்லியம் பிராட்லேவுக்கும் ஜேன் பவுண்டுக்கும் மகனாக கிளவுசுசெசுடெர்சயரில் செல்டென்காமுக்கு அருகில் இருந்த செர்போர்னில் பிறந்தார்.[2] இவர் நார்த்லீச்சில் உள்ள வெசுட்டுவுடு இலக்கணப் பள்ளியில் படித்தார். [3][4] இவர் 1711 மார்ச்சு 15 இல் ஆக்சுபோர்டு பால்லியோல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இவர் கலை இளவல் பட்டமும் கலை முதுவர் பட்டமும் முறையே 1714 இலும் 1717 இலும் பெற்றுள்ளார். இவரது மாமனும் திறம்வாய்ந்த வானியலாளருமான ஜேம்சு பவுண்டு அவர்களின் தனிப்பயிற்சி வழியாக் இவர் தனது முதல் நோக்கீடுகளை எசக்சில் உள்ள வான்சுடீடு காணகத்தில் செய்துள்ளார். இவர் 1718 நவம்பர் 6 இல் அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

அடுத்த ஆண்டு இவர் பிரிட்சுடோக்கின் விகார் ஆக ஆணையைப் பெற்றார். வேல்சில் ஒரு சிறுவீடும் இவரது நண்பரான சாமுவேல் மோலினியூக்சு வாங்கித் தந்தார். இவர் 1721 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சவிலியன் வானியல் கட்டில் தகைமை கிடைத்ததும் இக்கடமைகளில் இருந்து விடுபட்டு அங்கு சேர்ந்தார். அங்கு செய்முறை மெய்யியலில் உயர்விரிவுரையாளராக 1729 முதல் 1760 வரை இருந்தபோது, ஆழ்சுமோலியன் அருங்காட்சியகத்தில் 79 விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.

பிராட்லே 1742 இல் எட்மண்டு ஆல்லேவுக்குப் பின் அரசு வானியலாளராக அமர்த்தப்பட்டார்; இவரது புகழால் வெற்றிகரமாக கருவிகள் வாங்க 1,000பவுண்டுகளைப் பெற்றுள்ளார்; 8 அடி கால்வட்டக் கோணம் இவருக்காக ஜான்பர்டு எனும் வானியலாளரால் 1750 இல் கட்டித் தரப்பட்டது. இவர் கிரீன்விச்சில் ஏராளமான வானியல் கருவிகளை வானியலைச் சீர்திருத்தும் நோக்கில் திரட்டிவிட்டார்.ஆண்டுக்கு 250 பவுண்டு கிரவுன் ஓய்வூதியமும் இவருக்கு 1752 இல் வழங்கப்பட்டது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் உடல்நலமின்மையால் ஓய்வு பெற்று கிளவுசெசுடெர்சயரில் உள்ள சால்போர்டில் சாட்சுவோல்டு எனுமிடத்தில் தங்கியிருந்தார். அப்போது ஆக்சுபோர்டின் டேனியல் இலைசன்சு எனும் மருத்துவரின் கவனிப்பிலும் ஊரில் இருந்த மருத்துவரின் தொடர்கவனிப்பிலும் இருந்துள்ளார். இவர் 1762 ஜூலை 13 இல் சுகிவெரால்சு வீட்டில் இறந்தார். இவர் கிளவுசெசுடெர்சயரில் இருந்த மின்சின்காம்ப்டன் புனித டிரினிடி பேராயத்தில் அடக்கம் செய்யப்பட்டார் in Gloucestershire.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Histoire de l'astronomie au dix-huitième siècle, p. 413 (edited by Claude-Louis Mathieu, and published by Bachelier, Paris, 1827). See also pp. xvii and 420.
  2. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58198.html. பார்த்த நாள்: 22 August 2012. 
  3. Rawlinson, Caroline (1988). "Royal star gazer was a pupil". History of Westwood's Grammar School. Westwood's Grammar School Group. பார்க்கப்பட்ட நாள் 24 October 2013.
  4. 4.0 4.1 Williams, Mari E. W.. “Bradley, James (bap. 1692, d. 1762).” Oxford Dictionary of National Biography. Ed. H. C. G. Matthew and Brian Harrison. Oxford: OUP, 2004. Online ed. Ed. Lawrence Goldman. Oct. 2009. 18 Nov. 2015 <http://www.oxforddnb.com/view/article/3187>.
  5. Bradley was buried at the parish church in Minchinhampton, Gloucestershire. See Stratford, Joseph (1887). Gloucestershire Biographical Notes. Gloucester. பக். 109. https://books.google.com/books?id=NfIgAAAAMAAJ&pg=PA109&dq=James+Bradley+buried+astronomer. 

மேலும் படிக்க[தொகு]

  • Rigaud's Memoir, prefixed to Miscellaneous Works and Correspondence of James Bradley, D.D. (Oxford, 1832),
  • New and General Biographical Dictionary, xii. 54 (1767)
  • Biog. Brit. (Kippis)
  • Fouchy's Eloge, Paris Memoirs (1762), p. 231 (Histoire)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_பிராட்லே&oldid=3459764" இலிருந்து மீள்விக்கப்பட்டது