ஜெர்மன் கடற்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெர்மன் கடற்பறவை (Heermann's Gull) அமெரிக்க ஐக்கிய நாடு கலிபோர்னியா வளைகுடாப் பகுதி, மெக்சிக்கோ, பிரிட்டிசு கொலம்பியா போன்ற இடங்களின் கடற்கரையோரம் காணப்படுகிறது. பொதுவாக இப் பறவைகள் கடற்கரைகளின் அருகில் அல்லது கடலுக்குள் வெகுதூரத்திலும் மிகவும் அரிதாக உள்நாட்டிலும் காணப்படுகின்றன. இவைகள் பெரும்பாலும் கடற்கரை ஓரங்களில் காணப்படுகின்றன. உள்நாட்டுக்குள் அரிதாகவே வருகின்றன.

வளர்ந்த ஜெர்மன் கடற்பறவை

விளக்கம்[தொகு]

ஜெர்மன் கடற்பறவை மற்ற கடற்பறவைகளைவிட வித்தியாசமாக உள்ளது. வளர்ந்த பறவை சாம்பல் நிறத்திலும், கருமையான சாம்பல் சிறகுகளுடனும், வால் பகுதியின் முனை வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. இதன் அலகுப்பகுதி சிகப்பு நிறத்தில் கருப்பு கலந்து காணப்படுகிறது.[2] இப்பறவைகளில் வளர்ந்த பறவைகளின் தலைப்பகுதி சாம்பல் நிறத்திலும், இளம் பறவையின் தலைப்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது.[2]

பரவல்[தொகு]

கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா வளைகுடா, பாகா கலிபோர்னியா போன்ற தீவுப்பகுதியில் ஏராளமான பறவைகளைக் காணமுடிகிறது. இனப்பெருக்கத்துக்குப் பின் குவாத்தமாலா, பிரிட்டிசு கொலம்பியா போன்ற இடங்கள் வரை பரவிச் செல்கின்றன.[1]

மெக்சிக்கோவின் சொனொரா பகுதில் உள்ள கடல் பகுதி

பழக்கம்[தொகு]

இப்பறவையினம் பொதுவாகப் கூட்டமாக தரைப்பகுதியில் கூடு கட்டி வாழுகிறது. 100 சதுரடிப்பகுதியில் 110 கூடுகள் வரை காணப்படுகின்றன. இவை சாம்பல் நிறத்தில் பழுப்பு கோடுகள் உள்ளது போல் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் வரை இடுகின்றன. இப்பறவைகள் பொதுவாக மற்ற கடற்பறவைகளின் உணவைத் திருடி உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக பழுப்புக் கீச்சான் (Brown Pelicans) போன்ற பறவைகளிடம் திருடி உண்கிறது.

வசிப்பு நிலை[தொகு]

1964ம் ஆண்டுகளில் மெக்சிக்கோ பகுதியில் ஸ்லா ரசா (Isla Rasa) பகுதியில் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முட்டை சேகரிப்பவர்களிடமிருந்தும், இனப்பெருக்க காலத்தில் இடையூறு விளைவிப்பவர்களிடமிருந்து பறவைகளைக் பாதுகாக்க முடிகிறது. இப்பறவைகளின் இனப்பெருக்க காலங்களில் இங்குள்ள பல சிறிய தீவுகளில் பேரழிவு ஏற்படுத்தும் பழக்கங்கள் உள்ளது. இப்பறவையானது எல்நினோ கால ஓட்டத்தாலும் இந்த இனங்கள் பெரும் அழிவை சந்திப்பதால் பறவைகள் பாதுகாப்பு சங்கமானது அழிந்து வரும் இனம் என்று கணக்கிட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Larus heermanni". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 "Heermann's Gull". Cornell Lab of Ornithology. பார்க்கப்பட்ட நாள் 2013-12-13.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Larus heermanni
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மன்_கடற்பறவை&oldid=3477140" இலிருந்து மீள்விக்கப்பட்டது