ஜாப்பா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள நாட்டின் மாநில எண் 1 – இல் அமைந்த ஜாப்பா மாவட்டத்தின் அமைவிடம்

ஜாப்பா மாவட்டம் (Jhapa District) (நேபாளி: झापा जिल्लाListen) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தின், மேச்சி மண்டலத்தின் தராய் சமவெளியில் மாநில எண் 1-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையிட நகரம் பத்திரப்பூர் ஆகும். இதன் மற்றொரு நகரம் மேச்சிநகர் ஆகும்.

இதன் பரப்பளவு 1606 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜாபா மாவட்ட மக்கள் தொகை 8,12,650 ஆகும். [1] இம்மாவட்டத்தில் பேசப்படும் மொழிகள் நேபாள மொழி, லிம்பு மொழி மற்றும் ராஜ்பன்சி மொழிகளாகும். இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து அதிக பட்சம் 506 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal" (PDF). Archived from the original (PDF) on 2015-02-13. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாப்பா_மாவட்டம்&oldid=3893127" இலிருந்து மீள்விக்கப்பட்டது