ஜாக் சோஸ்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் வில்லியம் சோஸ்டாக்<
Jack William Szostak
பிறப்புநவம்பர் 9, 1952 (1952-11-09) (அகவை 71)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஉயிரியல்
பணியிடங்கள்ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி, ஹவார்ட் ஹியூஸ் மருத்துவக் கல்வி நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்மக்கில் பல்கலைக்கழகம், கோர்னெல் பல்கலைக்கழகம்
விருதுகள்லாஸ்கர் விருது, மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2009)

ஜாக் வில்லியம் சோஸ்டாக் (Jack William Szostak, பிறப்பு: நவம்பர் 9, 1952) என்பவர் உயிரியலாளரும்[1] ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் மரபியல் பேராசிரியரும் ஆவார். நிறப்புரிகள் எவ்வாறு முனைக்கூறுகளினால் காக்கப்படுகின்றன குறித்த ஆய்வுக்காக எலிசபெத் பிளாக்பர்ன், மற்றும் கரோல் கிரெய்டர் ஆகியோருடன் இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சொஸ்டாக் லண்டனில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர். கனடாவின் மக்கில் பல்கலைக்கழகத்தில் தனது 19வது அகவையில் கல உயிரியலில் பட்டப்படிப்பை முடித்தார். நியூயோர்க்கில் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்று ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் தனது தனிப்பட்ட ஆய்வுகூடத்தை அமைத்தார்.

ஆய்வுகள்[தொகு]

சோஸ்டாக் மரபியல் துறையில் தனது பெரும் பங்களிப்பை வழங்கினர். உலகின் முதலாவது காடி (yeast) செயற்கையான நிறப்புரியை (chromosome) உருவாக்கியமைக்காக இவர் அறியப்படுகிறார்.

இன்று இவரது ஆய்வுகூடத்தில் பூமியில் உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. அத்துடன், செயற்கையான உயிரணுக்களை ஆய்வுகூடத்தில் உருவாக்கும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டிருக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Jack W. Szostak - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Jack W. Szostak - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_சோஸ்டாக்&oldid=2274501" இலிருந்து மீள்விக்கப்பட்டது