ஜவாரி மாடு
Appearance
ஜவாரி மாடு (கன்னடம்:ಜವಾರಿ) என்பது இந்தியாவின் ஐதராபாத்-கர்நாடகப் பகுதியின் கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாட்டினமாகும். இவை நல்ல பால் கறக்கும் திறன் மற்றும் உழைக்கும் திறன் ஆகிய இரட்டை பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் நடுத்தர அளவுள்ளவையாகவும் மென்மையான குணமும் கொண்டவை. இவை வெப்ப கால நிலையைத் தாங்குவதாகவும், பூச்சி எதிர்ப்புத் திறனுடவையாகவும் உள்ளன. இந்த மாடுகள் அதன் பூர்வீக பகுதியில் வேண்டப்படும் மாட்டினமாக உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Javari cattle". Govanithashraya. பார்க்கப்பட்ட நாள் 14 May 2015.