ஜலதீபம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜலதீபம் மகாராஷ்டிரர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சாண்டில்யனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல் ஆகும். இது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக குமுதம் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்து பிறகு, வானதி பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதை மாந்தர்கள்[தொகு]

  1. இதயசந்திரன் - இந்த கதை மாந்தன் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் ஆவான். தமிழன் என்றே பிற கதை மாந்தர்களால் பெரும்பாலும் அழைக்கப்படுகிறான். இவனே ஜலதீபம் நூலின் நாயகனுமாவான். தஞ்சை இரகசிய ராணியின் வேண்டுகோளின் பேரில் மகாராஷ்டிர வாரிசைத் தேடி கொங்கணிக்கு வந்து சேர்கிறான். அவனைக் கண்டெடுக்கிறார் பிரும்மேந்திர சுவாமி, உடன் பானுதேவியும் இருக்கிறாள். அவள் இதயசந்திரனை அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்த திட்டமிடுகிறாள். இதயச்சந்திரனை பிரும்மேந்திர சுவாமியின் பரிந்துரைப்படி கனோஜி ஆங்கரே தமது கடற்படையில் சேர்த்துக் கொள்ள சம்மதிக்கிறார். அப்போது கனோஜி ஆங்கரேயின் வளர்ப்பு மகளாகிய மஞ்சு இதயசந்திரனுக்கு பலவகையிலும் உதவுகிறாள். அவள் மீது இதயசந்திரன் காதல் கொள்கிறான். இந்நிலையில்; பானுதேவி குறுக்கிடுகிறாள். ஆங்கரே கடற்போர் ஒன்றிற்கு இதயச்சந்திரனை தளபதி ஆக்குகிறார். அதில் வெற்றி பெறுகிறான். அந்தப் போரில் காதரைன் என்ற இளம்விதவை அறிமுகமாகி இதயச்சந்திரனுக்கு காமம் சார்ந்த தொல்லைகள் கொடுக்கிறாள். அவற்றில் இருந்து இதயச்சந்திரன் மீள்கிறான். கவர்னர் ஏஸ்லாபியை கனோஜி ஆங்கரேயின் உத்தரவுப்படி சந்திக்கும் இதயச்சந்திரன் எமிலி என்ற மருத்துவச்சியை சந்திக்கிறான். எமிலி இதயச்சந்திரனைக் காதலிக்கிறாள். இதயச்சந்திரனுக்கு மஞ்சுவைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதா அல்லது எமிலியை கல்யாணம் செய்வதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. இறுதியாக, தான் வந்த நோக்கத்தில் வெற்றி பெற்று தஞ்சைக்கு திரும்புகிறான் இதயச்சந்திரன்.
  2. கனோஜி ஆங்கரே: இவர் மகாராஷ்டிர. கடற்படை தளபதி ஆவார். தாராபாய் அவர்களால் 'ஸாரிய தாரங்கா ' என்ற பட்டம் சூட்டப்பட்டடவர். இவரை அயல்நாட்டினர் 'கடற்கொள்ளைக்காரன்' என்று அழைத்தனர். ,
  3. பிரும்மேந்திர சுவாமி மகாராஷ்டிர பேரரசில் முக்கியமான நிஜமான கதாபாத்திரம் ஆவார்.
  4. மஞ்சு - இந்த கதாபாத்திரமும் ஜலதீபம் வரலாற்று நூலின் கற்பனைக் கதாபாத்திரம் ஆகும். மஞ்சு என்று அழைக்கப்படும் மஞ்சுளா கனோஜி ஆங்கரேயின் வளர்ப்பு மகளாக இக்கதையில் இடம்பெறுகிறாள். இவள் ஜலதீபம் கப்பலின் சொந்தக்காரி. துணிச்சல்காரியான இவள் இதயச்சந்திரனைக் காதலிக்கிறாள்.
  5. பாலாஜி விஸ்வநாத்
  6. பேஷ்வா பிங்களே
  7. எமிலி
  8. நிம்கர்
  9. பானுதேவி இந்த கதாபாத்திரம் கற்பனை கதாபாத்திரம் ஆகும். ஷாகுவின் மருமகள் என்று அழைக்கப்படும் இவள் அரசாங்க காரியங்களில் தனக்கு ஆதரவாக இதயசந்திரனை ஈடுபடச் சொல்லி தூண்டி விடுகிறாள்.
  10. காதரைன்
  11. ஸாத் சித்தி
  12. ஹர்கோவிந்த்
  13. தஞ்சை இரகசிய ராணி
  14. இராஜாராம்
  15. இப்ராஹிம்
  16. பெர்னாண்டோ
  17. மிஸ்டர் பிரவுன்
  18. காஸ்ட்ரோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலதீபம்_(புதினம்)&oldid=3805810" இலிருந்து மீள்விக்கப்பட்டது