சோசப் இடமருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோசப் இடமருகு (Joseph Edamaruku, 7 செப்டம்பர் 1934-29 சூன் 2006) கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இதழாளரும் புரட்சிகர இறைமறுப்பாளரும் ஆவார். ”கேரளசப்தம்” என்ற இதழின் டெல்லி பிரிவின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் பணியாற்றினார். ”தேரலி” என்ற மலையாள இதழின் நிறுவன ஆசிரியராவார்.

1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக இருந்தார். பகுத்தறிவாளராக, இறைமறுப்பாளராக பல்வேறு மதம், தத்துவம் சார்ந்த 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ”த டைம் தேட் ரைசிடு தி டெம்பசுடு” (The Time that Raised the Tempest) என்ற இவரது தன் வரலாற்று நூல் கேரள அரசின் இலக்கிய விருதினைப் பெற்றுள்ளது. ஆபிரகாம் கோவூரின் புத்தகங்களை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இவரது மகன் சானல் இடமருகு, பன்னாட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக உள்ளார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசப்_இடமருகு&oldid=3367843" இலிருந்து மீள்விக்கப்பட்டது