சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் ஹொங்கொங், மக்காவ்

சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் (Special Administrative Regions - SAR) என்பவை சீன மக்கள் குடியரசின் நிர்வாகப் பொருப்பில் இருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள ஆட்சிப்பகுதிகளாகும். இப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சிறப்பு நிர்வாக ஆளுநர்கள் ஆட்சிப் பொருப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு சீன மக்கள் குடியரசின் கீழ் தற்பொழுது இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகள் உள்ளன.

இரண்டு சிறிய நாடுகளான ஹொங்கொங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளே அவைகளாகும். ஹொங்கொங் பிரித்தானியர் வசம் இருந்து மீளப்பெற்றது. மக்காவ் போர்த்துகீசர் வசம் இருந்து மீளப்பெற்றது ஆகும்.[1] இவற்றை சீனாவின் சிறப்பு பொருளாதார வலையங்களாக கருதவேண்டியதில்லை. இவைகளின் முழுமையான நிர்வாகப் பொருப்பு மத்திய சீன மக்கள் குடியரசு ஆட்சிக்கமையவே கைச்சாத்திடப்பட்டுள்ளன.

சீன மக்கள் குடியரசின் அரசியல் சட்டத்திற்கு அமைய, உடன்படிக்கை 31 படி சீனத் தேசிய மக்கள் காங்கிரசால் இச்சிறப்பு நிர்வாகப் பகுதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.[2]

சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்[தொகு]

சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்[3]
பெயர் சீனப்பெயர் (T) சீனப்பெயர் (S) பின்யின் வரைபடம் சுருக்கம்¹ மக்கள் தொகை நிலப்பரப்பு கி.மீ² பகுதி ISO நிர்வாகப் பிரிவு
 ஆங்காங் Xiānggǎng ஹொங்கொங் gǎng 7,008,900 1,104 தென்சீனா CN-91 List
 மக்காவு Àomén மக்காவு ào 546,200 29.5 தென்சீனா CN-92 List

மேற்கோள்கள்[தொகு]

  1. Ghai, Yash P. [2000] (2000). Autonomy and ethnicity: negotiating competing claims in multi-ethnic states. Cambridge University Press. ISBN 0521786428, 9780521786423. p 92.
  2. Lauterpacht, Elihu. Greenwood, C. J. [1999] (1999). International Law Reports Volume 114 of International Law Reports Set Complete set. Cambridge University Press, 1999. ISBN 0521642442, 9780521642446. p 394.
  3. References and details on data provided in the table can be found within the individual provincial articles.