சிவப்பு சிந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்கித்தானில் சிவப்பு சிந்தி காளை
சிந்தி பசு

சிவப்பு சிந்தி எனப்பவை நாட்டு மாட்டு இனங்களில் ஒன்றாகும். இந்த மாட்டினம் பாக்கித்தானின் சிந்து மாகாணப் பகுதியைச் சேர்ந்தவை. இவை பரவலாக பால் தேவைக்காக பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், இலங்கை மற்றும் பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.[1] இவை பல நாடுகளில் ஐரோப்பிய பால் மாடுகளுடன் இனக்கலப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இவை இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளில் ஜெர்சி இனப்பசுக்களுடன் இனக்கலப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.[2]

விளக்கம்[தொகு]

சிவப்பு சிந்தி மாடுகள் சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் குறுகிய கொம்புகளுடன் காணப்படும். சிந்தி மாடுகளில் வெள்ளை சிந்தி அல்லது தார்பார்க்கர் என்ற இன்னொரு வகையும் உண்டு. இந்த சிந்தி மாடுகளின் கொம்புகள் நீண்டு யாழ் போல வளைந்தும், உயர்ந்த திமில்களுடன் காணப்படும்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Red Sindhi Cattle". பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-02-23. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
  3. "Red Sindhi cattle". பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
  4. "Status, characteristics and performance of Red Sindhi cattle". The Indian Journal of Animal Sciences Pundir. http://epubs.icar.org.in/ejournal/index.php/IJAnS/article/view/10371. பார்த்த நாள்: 16 February 2016. 
  5. Abdul Wahid. Red Sindhi cattle.. Manager of Publications. http://www.worldcat.org/title/red-sindhi-cattle/oclc/13224514. பார்த்த நாள்: 16 February 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_சிந்தி&oldid=3608812" இலிருந்து மீள்விக்கப்பட்டது