ஹாம்ப்டென் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாம்ப்டென் பூங்கா
இடம் புளோரிடா மலை, கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து
திறவு 1903
சீர்படுத்தது 1999
உரிமையாளர் குயின்சுப் பார்க் காற்பந்துக் கழகம்
குத்தகை அணி(கள்) குயின்சுப் பார்க் காற்பந்துக் கழகம் (1903–நடப்பு)
இசுக்கொட்லாந்து தேசிய கால்பந்து அணி (1906–நடப்பு)
கிளாசுக்கோ டைகர்சு (1969–1972)
இசுக்கொட்டிசு கிளேமோர்சு (1998–2004)
அமரக்கூடிய பேர் 52,025 (காற்பந்து)[1]
44,000 (தடகளம்)[2]

ஹாம்ப்டென் பூங்கா (Hampden Park, சுருக்கமாக ஹாம்ப்டென்) இசுக்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் புளோரிடா மலை பகுதியில் அமைந்துள்ள காற்பந்து விளையாட்டரங்கமாகும். 52,025 அமரக்கூடிய இந்த அரங்கம் இசுக்கொட்லாந்தின் காற்பந்தாட்டங்களுக்கான தேசிய விளையாட்டரங்கமாக விளங்குகிறது. இதுஇசுக்கொட்லாந்து தேசியக் கால்பந்து அணிக்கும் குயின்சுபார்க் காற்பந்துக் கழக அணிக்கும் தாயக மைதானமாக விளங்குகிறது. இங்கு இசைக் கச்சேரிகளும் பிற விளையாட்டுத்துறைப் போட்டிகளும் நடத்தப் பயன்படுத்தப்படுகின்றது. 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் தடகளப் போட்டிகள் நடத்தும் வகையில் இது சீரமைக்கப்படுகிறது.

இசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கத்தின் (SFA) அலுவலகமும் இசுக்கொட்லாந்து காற்பந்து கூட்டிணைவு அலுவலகமும் இவ்வரங்கத்தில் இயங்குகின்றன. இந்த விளையாட்டரங்கில் மூன்று வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டங்களும், இரு கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை இறுதியாட்டங்களும் ஒரு யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு இறுதியாட்டமும் நடந்தேறுயுள்ளன. இதன் அண்மையில் மவுன்ட் புளோரிடா தொடர்வண்டி நிலையமும் கிங்சு பார்க் தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Queen's Park Football Club". www.spfl.co.uk. Scottish Professional Football League. பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.
  2. "Hampden athletics venue for Glasgow 2014 unveiled". BBC News. BBC. 12 March 2014. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாம்ப்டென்_பூங்கா&oldid=1694055" இலிருந்து மீள்விக்கப்பட்டது