ஹனுமா விஹாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஹனுமா விஹாரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கதே ஹனுமா விஹாரி
பிறப்பு13 அக்டோபர் 1993 (1993-10-13) (அகவை 30)
காக்கிநாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை புறத் திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 292)7 செப்டம்பர் 2018 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010–2016ஐதராபாத் மாநிலத் துடுப்பாட்ட அணி
2013, 2015சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2017–தற்போது வரைஆந்திரப் பிரதேச மாநிலத் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு த ப அ இ 20
ஆட்டங்கள் 63 56 65
ஓட்டங்கள் 5,142 2,268 1,219
மட்டையாட்ட சராசரி 59.79 47.25 21.38
100கள்/50கள் 15/24 4/13 0/4
அதியுயர் ஓட்டம் 302* 169 81
வீசிய பந்துகள் 1,390 678 360
வீழ்த்தல்கள் 19 12 21
பந்துவீச்சு சராசரி 39.42 45.50 20.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/17 2/18 3/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
64/1 17/0 27/2
மூலம்: கிரிக் இன்ஃபோ, 23 ஆகத்து 2018

ஹனுமா விஹாரி (பிறப்பு:அக்டோபர் 13, 1993) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்ளூர்ப் போட்டிகளில் ஆந்திரப் பிரதேசமாநில அணிக்காக விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை புறத்திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.[1] 2018 இங்கிலாந்துத் தொடரில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

ஆகஸ்டு, 2018 இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2018 இல் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இறுதி இரண்டு தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடுவதற்காக இவர் தேர்வானார்.[2] செப்டம்பர் 7, 2018 இல் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[3] ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் ஐம்பது ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[4][5]

சான்றுகள்[தொகு]

  1. "India Under-19s Squad". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டெம்பர் 2018.
  2. "India call up Prithvi Shaw, Hanuma Vihari for last two Tests in England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 August 2018.
  3. "5th Test, India tour of Ireland and England at London, Sep 7-11 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
  4. "India vs England: Hanuma Vihari scores fifty on debut to keep visitors afloat". hindustan times. 9 September 2018. https://www.hindustantimes.com/sports/india-vs-england-hanuma-vihari-scores-fifty-on-debut-to-keep-visitors-afloat/story-IRTO7ibsXvVeb3o1gRlGBO.html. 
  5. "5th Test, India tour of Ireland and England at London, Sep 7-11 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனுமா_விஹாரி&oldid=3719182" இலிருந்து மீள்விக்கப்பட்டது