வேலைகொள்வோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலைகொள்வோர் என்போர், ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் தனியாட்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும். வேலைகொள்வோர் ஊழியர்கள் செய்யும் வேலைக்கு ஈடாகக் கூலியை அல்லது சம்பளத்தை வழங்குவர். வெளிப்படையான அல்லது உட்கிடையான ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் வேலைக்காரர்களை அல்லது ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்குக் கூலியை அல்லது சம்பளத்தை வழங்கும் ஒரு சட்டபூர்வ அமைப்பே வேலைகொள்வோர் என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.[1]

குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் ஒருவரைப் பணிக்கமர்த்தும் தனியாட்கள் முதல், அரசாங்கம், பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கமர்த்தும் தனியார் நிறுவனங்கள் வரை வேலைகொள்வோர் என்பதுள் அடங்குவன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BusinessDictionary.com". Archived from the original on 2015-10-11. பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலைகொள்வோர்&oldid=3572693" இலிருந்து மீள்விக்கப்பட்டது