வேதியியற் சமநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியற் சமநிலை என்பது, ஒரு வேதியியற் தாக்கத்தின்போது, தாக்கத்தில் ஈடுபடும் வினைபொருட்களும் (reactants), வினைபடு பொருட்களும்(products), ஒரே செறிவு நிலையில் மாற்றமின்றி இருக்கும் நிலையைக் குறிக்கும். இந் நிலை, பொதுவாக, முன்நோக்கிய தாக்கமும், பின்நோக்கிய தாக்கமும் ஒரே அளவு வீதத்தில் நடைபெறுவதால் ஏற்படுகின்றது. முன்நோக்கிய, பின்நோக்கிய தாக்க வீதங்கள் என்றும் பூச்சியமாக இருப்பதில்லை, ஆனால் அவை ஒரே அளவு வீதத்தில் நடைபெறுவதால், மொத்தமாகப் பார்க்கும்போது பொருட்களின் அளவுகளில் மாற்றங்கள் எதுவும் இருப்பதில்லை. இச் செயற்பாடு இயக்கச் சமநிலை எனப்படுகின்றது. அடிப்படையில், இங்கே தாக்கங்கள் முழுமையாக நடைபெற்று முடிவதில்லை ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமநிலை அடைகின்றது.

இவ்வாறு ஓர் அமைப்பில் எந்தவொரு வேதிவினையும் நிகழாதிருந்தாலோ, அல்லது ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குப் பரவலின் வழியாகப் பொருள் நகர்ச்சி இல்லாதிருந்தாலோ அவ்வமைப்பில் வேதியியற் சமநிலை இருக்கிறது எனலாம். இரண்டு அமைப்புகள் வேதியியற் சமநிலையில் இருந்தால் அவற்றின் வேதிப்பண்பு சமமாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதியியற்_சமநிலை&oldid=2740819" இலிருந்து மீள்விக்கப்பட்டது