வெப்ப வளிமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளிமண்டலப் படலங்கள் (NOAA)

வெப்ப வளிமண்டலம் (thermosphere) அல்லது வெப்ப மண்டலம் என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளிமண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது. 80 - 85 கிமீ [1] முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும் செய்மதிகள் இம்மண்டலத்திலேயே அதிகளவில் காணப்படும்.

பூமியின் தரைமட்டத்தில் இருந்து மேலே போகப்போக வெப்பநிலை தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது. மேலே போகப்போக காற்றின் அடர்த்தி குறைகிறது. காற்றின் அடர்த்தி குறையும் போது அதில் தேங்கக்கூடிய வெப்பம் குறைந்து போகிறது. ஆனால் காற்றின் அடர்த்தி மிகவும் குறைந்துவிடும் போது அதிலுள்ள அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும். ஆனால் விழுகிற வெயிலில் அவற்றுக்கு அதிகமான பங்கு கிடைக்கும். அவற்றின் இயக்க ஆற்றல் மிக அதிகமாகி விடுகிறது. அதை வெப்பநிலை என்கிறோம். விண்வெளியில் 16 கிலோமீட்டருக்கு மேற்பட்ட உயரங்களில் இந்த விளைவு மேம்பட்டுத் தெரிகிறது. அதனால் கொஞ்ச தூரத்திற்கு வெப்பநிலை மாறிலியாக இருக்கும். 80 கிலோமீட்டருக்கு மேல் வெப்ப நிலை உயரத் தொடங்குகிறது என்று 1960களில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் கண்டுபிடித்துள்ளன. 480 கிலோ மீட்டர் உயரத்தில் அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின் வெப்ப நிலை 1000 செல்சியஸ் டிகிரியை எட்டி விடுகிறது. ஆனால் அங்கு அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் அப்பகுதியில் தேங்குகிற மொத்த வெப்ப ஆற்றல் குறைவாகத்தானிருக்கும். இந்தப் பகுதிக்கு வெப்ப வளிமண்டலம் என்று பெயர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Duxbury & Duxbury. Introduction to the World's Oceans. 5ed. (1997)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_வளிமண்டலம்&oldid=3082751" இலிருந்து மீள்விக்கப்பட்டது