விவிலியத் திருமுறை நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவிலியத் திருமுறை நூல்கள் (Canonical Books) எனப்படும் நூல்கள், பொதுவாக அனைத்து கிறிஸ்தவ சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் விவிலிய நூல்கள் ஆகும். பழைய ஏற்பாட்டின் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டின் 27 நூல்களும் திருமுறை நூல்களின் பட்டியலில் இடம்பெறுகின்றன.

திருமுறை நூல்கள்[தொகு]

யூதர்களின் எபிரேய விவிலியத்தின் 39 நூல்களும் பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் இறைஏவுதல் பற்றி எந்த கிறிஸ்தவ சபையும் பொதுவாக சந்தேகம் கொள்வதில்லை. இவற்றில் திருச்சட்ட நூல்கள், வரலாற்று நூல்கள், இறைவாக்கு நூல்கள் மற்றும் ஞான நூல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இவற்றைத் தவிர்த்து, சில பாரம்பரிய திருச்சபையினரால் மட்டும் ஏற்கப்படும் கிரேக்க மரபில் தோன்றிய சில பழைய ஏற்பாட்டு நூல்கள், இணைத் திருமுறை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை ஏழு கிரேக்க மரபு நூல்களும், இரண்டு எபிரேய மரபு நூல்களின் கிரேக்க இணைப்பு பகுதிகளும் இணைத் திருமுறையாக கருதப்படுகின்றன.

புதிய ஏற்பாட்டைப் பொறுத்த அளவில், தொடக்க காலம் முதலே கத்தோலிக்க திருச்சபையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள 27 நூல்களும் பொதுவாக அனைத்து சபையினராலும் திருமுறை நூல்களாக ஏற்கப்படுகின்றன. இவற்றில் நற்செய்தி நூல்கள், தொடக்க திருச்சபையின் வரலாறு, கிறிஸ்தவ நம்பிக்கை பற்றிய திருமுகங்கள் மற்றும் திருவெளிப்பாடு நூல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பழைய ஏற்பாடு[தொகு]

பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் பின்வருமாறு:

  • திருச்சட்ட நூல்கள் அல்லது ஐந்நூல்கள்:
தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம்
  • வரலாற்று நூல்கள் (12):
யோசுவா, நீதித் தலைவர்கள், ரூத்து, 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 அரசர்கள், 2 அரசர்கள், 1 குறிப்பேடு, 2 குறிப்பேடு, எஸ்ரா, நெகேமியா, எஸ்தர்
  • இறைவாக்கு நூல்கள் (17):
பெரிய இறைவாக்கினர்: எசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல்
சிறிய இறைவாக்கினர்: ஓசேயா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீக்கா, நாகூம், அபக்கூக்கு, செப்பனியா, ஆகாய், செக்கரியா, மலாக்கி
  • ஞான நூல்கள் (5):
யோபு, திருப்பாடல்கள், நீதிமொழிகள், சபை உரையாளர், இனிமைமிகு பாடல்

புதிய ஏற்பாடு[தொகு]

புதிய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் பின்வருமாறு:

மத்தேயு நற்செய்தி, மாற்கு நற்செய்தி, லூக்கா நற்செய்தி, யோவான் நற்செய்தி
  • வரலாற்று நூல்:
திருத்தூதர் பணிகள்
உரோமையருக்கு எழுதிய திருமுகம், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம், கலாத்தியருக்கு எழுதிய திருமுகம், எபேசியருக்கு எழுதிய திருமுகம், பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம், கொலோசையருக்கு எழுதிய திருமுகம், தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம், தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம், திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம், திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம், தீத்துவுக்கு எழுதிய திருமுகம், பிலமோனுக்கு எழுதிய திருமுகம்
> எபிரேயருக்கு எழுதிய திருமுகம் - தற்கால விவிலிய அறிஞர்களின் கருத்துப்படி, இத்திருமுகம் பவுலால் எழுதப்படவில்லை
  • பொது திருமுகங்கள் (7):
யாக்கோபு எழுதிய திருமுகம், பேதுரு எழுதிய முதல் திருமுகம், பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம், யோவான் எழுதிய முதல் திருமுகம், யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம், யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம், யூதா எழுதிய திருமுகம்
  • காட்சி நூல்:
திருவெளிப்பாடு

வெளி இணைப்புகள்[தொகு]