விக்கிப்பீடியா:அதிகாரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிகாரிகள் பட்டியல்

தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல விக்கிமீடியா திட்டங்களிலும் சில சிறப்பு நுட்ப அணுக்கங்களைக் கொண்ட பயனர்களை அதிகாரிகள் என்பர். ஒரு பயனரின் வேண்டுகோளுக்கேற்பவும் வேறு தேவைகளின்போதும் பயனர் பெயரை மாற்றுவதும், நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பயனர் ஒருவருக்கு உரித்தான நுட்ப அணுக்கத்தை வழங்குவதும், தானியங்கிக் கணக்குகளாக முறைப்படி அனுமதிக்கப்படும் கணக்குகளுக்கு உரிய அணுக்கத்தை வழங்குவதும் அதிகாரிகளின் பணிகள் ஆகும். மற்ற சிறப்பு அணுக்கங்களைப் போலவே அதிகாரி என்பதும் ஏதும் சிறப்புத் தகுதியோ பட்டமோ இல்லை. அதிகாரிகள் தம்முடன் பங்களிப்பவர்களின் நம்பிக்கைக்கேற்ப கூட்டு நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான நுட்ப அணுக்கங்களின் காப்பாளர்கள் மட்டுமே.

பயனர் பெயர் மாற்றத்துக்கான கோரிக்கைகளை அதிகாரிகளுக்கான அறிவிப்புப் பலகையில் முன்வைக்கலாம். தானியங்கி அணுக்கத்துக்கான வேண்டுகோள்களை விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள் பக்கத்தில் சேர்க்கலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]