வார் (பொறிமுறை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Yanmar 2GM20 எனப் பெயரிடப்பட்ட ஒரு கடல் சார் பொறியில் வார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொறிமுறையில் வார் [ஆங்கிலத்தில் belt (mechanical)] என்பது, வளைந்து கொடுக்கும் தன்மையுடைய பொருளினால் செய்யப்பட்ட வளைய வடிவ சாதனமாகும். இயந்திர பாகமான வார், பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுழலும் தண்டுகளை பொறிமுறையில் இணைக்கிறது.

வார்கள் பொதுவாக இயக்கத்தின் மூலங்களாகவோ, ஆற்றலை அதிகத் திறனுடன் மாற்றவோ அல்லது ஒப்பு-நகர்விற்காகவோ பயன்படுத்தப்படுகின்றன. இயக்கத்தின் மூலமாக செயல்படுதலுக்கு சுமந்து-செல்லி வாரை (conveyor belt) உதாரணமாகக் கூறலாம். இங்கு வாரானது இரு புள்ளிகளுக்கிடையே சுமைகளை தொடர்ச்சியாகக் கொண்டு செல்கிறது.

ஆற்றல் செலுத்துகை[தொகு]

தண்டுகளுக்கிடையே ஆற்றலை எடுத்துச் செல்ல எளிய, சிக்கனமான சாதனமாக வார்கள் கருதப்படுகின்றன. குறைவான ஓசையுடன் இலகுவாக ஓடுதல், வாரின் சிறப்பாகும். எனினும் பற்சக்கர மற்றும் சங்கிலி செலுத்துகைகளுடன் ஒப்பிடும்போது, வலு குறைந்த ஒன்றாக வார் இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்_(பொறிமுறை)&oldid=1629576" இலிருந்து மீள்விக்கப்பட்டது