வணிகக் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணிகக்காற்று மஞ்சள் (அம்புக்குறிகளில்)

வணிகக் காற்று அல்லது தடக்காற்று என்பது நிலநடுக்கோட்டு வெப்பமண்டல வளிமண்டலத்தின் கீழடுக்கின் கீழ்ப்பகுதியில் வீசும் காற்றோட்டமாகும். புவியின் வடஅரைக்கோளத்தில் வடகிழக்காகவும் தென்அரைக்கோளத்தில் தென்கிழக்காகவும் இக்காற்று வீசும்.[1]

பல நூற்றாண்டுகளாக இக்காற்றோட்டத்தைப் பயன்படுத்தியே மாலுமிகள் கடலில் தங்கள் கப்பலைச் செலுத்தி வாணிகஞ் செய்து வந்ததால் இக்காற்று வணிகக்காற்று எனப் பெயர் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Glossary of Meteorology (2010). "trade winds". American Meteorological Society. Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகக்_காற்று&oldid=3570794" இலிருந்து மீள்விக்கப்பட்டது