லெனி ரீபென்ஸ்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெனி ரீபென்ஸ்டால்
இயற் பெயர் லெனி ரீபென்ஸ்டால்
பிறப்பு (1902-08-22)22 ஆகத்து 1902
இறப்பு 8 அக்டோபர் 2003(2003-10-08) (அகவை 101)
Pöcking, ஜெர்மனி
தொழில் திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகை, நடனக் கலைஞர், எழுத்தாளர்
துணைவர் பீட்டர் ஜேக்கப் (1943-1945)
ஹோர்ஸ்ட் கெட்னர் (2003)[1]
இணையத்தளம் leni-riefenstahl.de

ஹெலன் பெர்தா அமலி "லெனி" ரீபென்ஸ்டால் (ஆங்கிலம்:Helene Bertha Amalie "Leni" Riefenstahl; ஜெர்மன்:[ˈʁiːfənʃtaːl]; ஆகஸ்ட் 22, 1902 - செப்டம்பர் 8, 2003) ஒரு ஜெர்மானியத் திரைப்பட இயக்குனர், நடிகை, புகைப்படக் கலைஞர் மற்றும் நடனக் கலைஞர் என பல்லூடகங்களிலும் பெயர் பெற்றவர். நாட்சி கட்சி சார்ந்த உறுதியின் வெற்றி என்ற திரைப்படத்தை இயக்கிப் புகழ்பெற்றவர். ஹிட்லர் காலத்திலேயே புகழ்பெற்ற கலைஞராக வாழ்ந்தார். ஹிட்லர் மற்றும் நாசிக் கட்சியுடன் அவருக்கிருந்த தொடர்பால் இரண்டாம் உலகப்போரின் போது அவரது திரைப்பட வாழ்க்கைப் பாதிப்புற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டுப் பின்னர், எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டார்[2].

1935 அம் ஆண்டு தான் இயக்கிய "டிரியம்ப் அப் தி வில்" (உறுதியின் வெற்றி) திரைப்படம் மூலம் இயக்குனராக புகழ்பெற்ற இவர் இயக்கிய எட்டுத் திரைப்படங்களில் இரு படங்கள் ஜெர்மனியைத் தாண்டி படமெடுக்கப்பட்டவை. "தி எகனாமிஸ்ட்" வார இதழ் இவரை ‘இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பெண் இயக்குனர்’ எனக் குறிப்பிட்டது[3].

1973 ல் நுபா எனும் சூடான் நாட்டு பழங்குடியினரின் வாழ்க்கையைப் புகைப்படங்களாக தொகுத்து பல புத்தகங்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்று "தி லாஸ்ட் அப் நுபா" புத்தகம். 2002 ஆம் ஆண்டு அவரது கடற் பயண அனுபவங்களைத் திரைப்படமாக வடிவமைத்தார் அதுவே புகழ்பெற்ற " இம்பெர்சொனென் அண்டர் வெசர்" எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. அவரது புகைப்படங்களும் இதற்குச் சான்றுகளாக அமைந்தன. அவர் இறந்த பின் அசோசியேட்டட் பிரஸ் இவரை "திரைப்பட மற்றும் புகைப்பட தொழில் நுட்பங்களின் முன்னோடி" எனப் பாராட்டியது[4].

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஆகஸ்ட் 22, 1902 ஒரு ஜெர்மானிய ப்ரொடெச்டண்ட் குடும்பத்தில் லெனி பிறந்தார்[5]. அவரது தந்தை சொந்தமாக ஒரு வெப்பமூட்டும் மற்றும் காற்றோட்டம் நிறுவனம் கொண்டிருந்தார். தனக்குப் பின் தனது நிறுவனத்தை லெனி நிர்வகிப்பார் என்ற என்ணத்தில் அவர் இருந்தார்[6]. ஆனால் லெனியோ ஓவியம் வரைவதிலும், நடனத்திலும் தனது ஆர்வத்தை காட்டினார். 1918 ல் லெனி கிரீம் ரேயட்டர் நடன பள்ளியில் நடனப் பயிற்சியாளராக சேர்ந்தார்.

லெனி தனது திறமையாலும், பாராட்டினாலும் நடனப் பள்ளியிலிருந்து முன்னேறி திரைப்படத் துறைக்குச் சென்றார். அர்னல்ட் பன்கிர்காகத் அவர் இயக்கிய படங்களில் " தி வொயிட் ஹெல் அப் பிட்ச் பளு"( 1929) திரைப்படத்தை G.W. பப்ஸ்ட் என்பவருடன் இணைந்து இயக்கினார். இப்படத்தின் புகழ் ஜெர்மனியையும் தாண்டி மற்ற நாடுகளில் பேசப்பட்டது. லெனி தானே தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் "தி ப்ளூ லைட்"(1932) என்ற திரைப்படம், கார்ல் மேயர் மற்றும் பெல்லா பலஸ் ஆகியோர் இணை எழுத்தாளர்களாக இப்படத்திற்கு பணியாற்றினார். இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் வெள்ளி பதக்கத்தை வென்றது. இப்படத்தில் லெனி ஒளிரும் மலைக்குகையை பாதுகாக்கும் ஒரு விவசாயப் பெண்மணியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் ஹிட்லரின் கவனம் லெனி மீது திரும்பியது. ஹிட்லர் லெனியை ஜெர்மானியப் பெண்களின் முன்மாதிரியாக திகழ்வதாய் நம்பினார்.

தொழில்[தொகு]

நடனம் மற்றும் நடிகையாக[தொகு]

லெனி நடனப்பள்ளியில் நடன வகுப்பெடுத்தும், தன் சுய முயற்சியாலும் மேலும் பல அரங்கேற்றங்களில் கலந்துகொண்டும் வரலாறு போற்றும் நடனக் கலைஞர் ஆனார். ஹாரி ஷொவ்கல் எனும் தயாரிப்பாளர் நடத்திய ஐரோப்பிய மேடை நடனங்களில் இயக்குனர் ரீன் ஹர்ட் உடன் சேர்ந்து கலந்துகொண்டார்[7][8]. பாரகுவேயில் நடந்த மேடை நடனத்தில் தனது முழங்காலில் அடிபட்டமையால் தொடர்ந்து நடனங்களில் கலந்துகொள்ள முடியவில்லை. ஓய்வின் போது பார்த்த மொவுண்டின் அப் டெஸ்டினி எனும் திரைப்படங்கள் அவரை திரைப்படம் இயக்க தூண்டியது[9]. பின் அர்னோல்ட் பாங்கை (திரைபட இயக்குனர்) சந்தித்ததன் மூலம் தனது திரைப்படம் நடிக்கும் ஆசையை வெளியிட்டார்.

தி ப்ளூ லைட் (Das Blaue Licht) சுவரொட்டி, 1934

முதலில் ஊமைப் படங்களில் தனது நடிப்பினை ஆரம்பித்தார். ஜெர்மன் மக்கள் மற்றும் இயக்குனர்கள் பாராட்டும் நடிகையாகத் திகழ்ந்தார். அவர் நடித்த காலங்களில் ஹிட்லரும் லேனியின் ரசிகராக இருந்தார். பாங்குடன் இணைந்து 1928 ல் ஸ்டேன். மோரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியைப் புகைப்படம் மற்றும் படமெடுப்பதில் ஆர்வம் காட்டினார்[9]. அவரது புகைப்படமெடுக்கும் திறைமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

அவருக்குத் திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது மகிழ்வுடன் ஏற்றுகொண்டார், தனது முதல் திரைப்படம் "தாஸ் பாலு லைட்" ( தி ப்ளூ லைட் ) (1932) என்ற காவியத்தை பாங்கை விட யதார்த்தமாகவும், அழகிய தொகுப்புகளுடனும் இயக்கினார். பெல்லா பலஸ் மற்றும் கார்ல் மேயர் ஆகிய எழுத்தாளர்களுடன் இணைந்து புதிய நடையில் திரைப்படங்கள் இயக்கலானார். ஆனால், இரு யூத எழுத்தாளர்களுக்கும் கிடைக்க வேண்டிய நன்மதிப்புகள் கிடைக்கபெறவில்லை, இதற்கு காரணம் லேனியின் கட்டளை என பேசப்பட்டது. லேனியின் பெருமை கண்டு ஹாலிவுட்டிலிருந்து திரைப்படம் இயக்க அழைப்பு வந்தது. ஆனால், லெனி தனது காதலனுடன் இருக்க வேண்டி அந்த அழைப்பை நிராகரித்தார்.

திரைப்பட வரலாறு[தொகு]

1993 ல் ரே முல்லரால் இயக்கப்பட்ட லெனியை பற்றிய ஆவணப்படம் "தி வொன்டர்புல் , ஹாரிபிள் லைப் அப் லெனி ரீபென்ஸ்டால்" என்ற திரைப்படம் எம்மி அவார்டு வென்றது[10]. இப்படத்தில் லெனி தோன்றி பல கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் மேலும் தான் தயாரித்த படங்களை பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும், முல்லரின் 2000 வது திரைப்படம் "லெனி ரீபென்ஸ்டால்: ஹேர் ட்ரீம் அப் ஆபிரிக்கா" என்ற ஆவணப்படத்தில் லேனியின் சூடான் பயணம் மற்றும் நுபா மக்களை சந்தித்ததையும் காட்டியுள்ளார்[11].

படைப்புகள்[தொகு]

ரீபென்ஸ்டாலின் திரை சாதனைகள்[தொகு]

வருடம் திரைப்படம் இயக்கியவை தயாரித்தவை எழுதியவை நடித்தவை கதாபாத்திரம்
1925 வே டு ஸ்ட்ரேன்த் அண்ட் பியுட்டி ஆம்

நாட்டிய மங்கை

1926 தி ஹோலி மவுண்டைன் ஆம் பெண் வேதாந்தி
1927 தி கிரேட் லீப் ஆம் வழிப்போக்கன்
1928 பாஸ்ட் அப் தி ஹவுஸ் அப் ஹப்ஸ்பெர்க் ஆம் மரியா வெட்செரா
1929 தி வொயிட் ஹெல் அப் பிட்ச் பளு ஆம் மரியா மையொனி
1930 ஸ்டார்ம் ஓவர் மொண்ட் ப்ளங் ஆம் ஹெல்ல ஆம்ஸ்ட்ராங்
1931 தி வொயிட் எக்ஸ்டசி ஆம் லெனி
1932 தி ப்ளூ லைட் ஆம் ஆம் ஆம் ஆம் ஜண்டா
1933 எஸ். ஒ . எஸ் எயிஸ்பெர்க் ஆம் எலன் லாரன்ஸ்
1933 விக்டரி அப் பயித் ஆம்
1935 டே அப் ப்ரீடம் : அவர் ஆர்ம்டு போர்செஸ் ஆம் ஆம் ஆம்
1935 ட்ரிம்ப் அப் தி வில் ஆம் ஆம் ஆம்
1937 வயல்டு வாட்டர் ஆம்
1938 பெஸ்டிவல் அப் நேசன் ஆம் ஆம் ஆம் ஆம் மாடல்
1938 பெஸ்டிவல் அப் புயுட்டி ஆம் ஆம் ஆம்
1954 லோலண்ட்ஸ் ஆம் ஆம் ஆம் ஆம் மார்த்தா
2002 அண்டர் வாட்டர் இம்ப்ரெசன் ஆம்

மேற்கோள்கள்[தொகு]

  1. TZ Online, Leni Riefenstahl: Letztes Geheimnis geleftet! retrieved 4 October 2007
  2. Leni Riefenstahl.The Wonderful, Horrible Life of Leni Riefenstahl[motion picture].Germany, Africa:Ray Müller.
  3. "Leni Riefenstahl: Hand-held history". The Economist. September 2003. pp. XX. http://www.economist.com/displaystory.cfm?story_id=2051630. 
  4. Bulldog News, Hitler’s Filmmaker Leni Riefenstahl Dead at 101 (after Associated Press), 9 September 2003, retrieved 5 January 2008
  5. "Leni Riefenstahl" by Leni Riefenstahl; pages: 11, 104
  6. "University of Washington; Courses: Leni Riefenstahl Biography "
  7. Falcon, Richard (9 September 2003). "Leni Riefenstahl". London: The Guardian. pp. XX. http://www.guardian.co.uk/film/2003/sep/09/world.news1. 
  8. Thurman, Judith (17 March 2007). "Where There's a Will". The New Yorker. pp. XX. http://www.newyorker.com/arts/critics/books/2007/03/19/070319crbo_books_thurman?currentPage=3. 
  9. 9.0 9.1 Williams, Val (10 September 2003). "Leni Riefenstahl". London: The Independent. pp. XX இம் மூலத்தில் இருந்து 23 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100623013334/http://www.independent.co.uk/news/obituaries/leni-riefenstahl-548728.html. 
  10. International Emmy Awards. 1993, Leni Riefenstahl Dead at 101 ( IMDB. Retrieved 21 December 2012.)
  11. "Leni Riefenstahl in Sudan (2003)"

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெனி_ரீபென்ஸ்டால்&oldid=3227560" இலிருந்து மீள்விக்கப்பட்டது