ரோசிணி மல்கோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசினி மல்கோத்ரா
தேசியம்இந்தியன்
கல்விஎம்பிஏ
படித்த கல்வி நிறுவனங்கள்கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரி
பணிஎச் சி எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாகி, சிவ நாடார் அறக்கட்டளை
செயற்பாட்டுக்
காலம்
2008 முதல் தற்போது வரை
பணியகம்ஹெச்சியல்
சொந்த ஊர்திருநெல்வேலி, தமிழ்நாடு
சமயம்இந்து
பெற்றோர்சிவ நாடார், கிரண் நாடார்
வாழ்க்கைத்
துணை
ஹிகர் மல்ஹோத்ரா

ரோசிணி மல்கோத்ரா (Roshni Malhotra) என்பவர் எச்.சி.எல் நிறுவனத்தின் [1] தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர் எச் சி எல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவ நாடார்-கிரண் நாடார்[2] தம்பதியரின் ஒரே மகள் ஆவார்.[3] மேலும் இவர் இசைக்கலைஞராகவும், யோகா கற்றுக்கொண்டவராகவும் உள்ளார். ஹெச்சிஎல் நிறுவனத்தில் மிக பெரிய உத்திகளை வகுக்கும் பொறுப்பில் உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

ரோசிணி மல்கோத்ரா புது தில்லியில் வளர்ந்தார். அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் (Northwestern University) வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சம்பந்தமாக இளங்கலைப் பட்டம் பெற்றார். கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில் (Kellogg School of Management)[4] நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சிவ் நாடார் அறக்கட்டளை[தொகு]

ஸ்கை நியூஸ் (இங்கிலாந்து), சிஎன்என் (அமெரிக்கா) போன்ற நிறுவனங்களில் சில காலம் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றினார். கொடையாளராகவும், அதிகாரம் மிக்க பெண் தொழிலதிபராகவும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிவ்நாடார் அறக்கட்டளையின் மூலம் சென்னையில் சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியை இலாப நோக்கம் இல்லாமல் நடத்திவருகிறார்.

ஹெச்சிஎல் பிராண்ட், ஷிவ் நாடார் அறக்கட்டளை, ஹெச்சிஎல் ஹெல்த்கேர் பிரிவு போன்ற நிறுவனங்களுக்கும் இவர் தலைமையேற்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக வித்யகியான் பள்ளி[5][6] திட்டத்தை நிறுவியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. சிவ் நாடார் பல்கலைக்கழகத்தையும் (Shiv Nadar University) நிர்வாகம் செய்கிறார்.

விருது[தொகு]

2014ம் ஆண்டுக்கான இளம் வள்ளல் பட்டத்தை என்டிடிவி வழங்கியுள்ளது.[7]

மேற்கோள்[தொகு]

  1. "Roshni Nadar is CEO of HCL Corporation". Sify. 2009-07-02. http://sify.com/finance/fullstory.php?a=jhcj6lghiei&title=Roshni_Nadar_is_CEO_of_HCL_Corporation. பார்த்த நாள்: 2009-07-02. 
  2. Kiran Nadar conferred with France's highest civilian award
  3. "Roshni Nadar Takes Over As CEO Of HCL Corp". EFYtimes.com. 2009-07-02 இம் மூலத்தில் இருந்து 2009-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090820183725/http://www.efytimes.com/efytimes/35569/news.htm. பார்த்த நாள்: 2009-07-02. 
  4. "Roshni Nadar made CEO of HCL Corp". The Hindu. 2009-07-02. http://www.thehindubusinessline.com/2009/07/02/stories/2009070250810401.htm. பார்த்த நாள்: 2009-07-02. 
  5. Naazneen Karmali (2009-08-23). "Roshni Nadar Is Not Intimidated". Forbes இம் மூலத்தில் இருந்து 2013-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130123082432/http://www.forbes.com/2009/08/22/hcl-india-roshni-nadar-technology-internet-nadar-q-and-a.html. பார்த்த நாள்: 2009-08-07. 
  6. "Shiv Nadar Foundation Opens Free Schools In UP". EFY. 2009-08-12. http://www.efytimes.com/efytimes/fullnews.asp?edid=36493. பார்த்த நாள்: 2009-08-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Roshni Nadar honored with NDTV Young philanthropist of the Year Award". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசிணி_மல்கோத்ரா&oldid=3773876" இலிருந்து மீள்விக்கப்பட்டது