ராணா பகதூர் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணா பகதூர் ஷா
நேபாள மன்னர்
ஆட்சி17 நவம்பர் 1777 – 8 மாரச் 1799
முடிசூட்டு விழாசனவரி 1778[1]
முன்னிருந்தவர்பிரதாப் சிங் ஷா
பின்வந்தவர்கீர்வான் யுத்த விக்ரம் ஷா
துணைவர்ராணி ராஜராஜேஸ்வரி
(m.1789-1806; his death)
சுபர்ண பிரபா தேவி
(m.1791-1806; her death)
கந்தவதி தேவி
(m.1797-1799; her death)
ராணி திரிபுரசுந்தரி
(m.1804-1806; her death)
வாரிசு(கள்)ராணோத்திய விக்ரம் ஷா
சம்செர் ஷா Samarsher Shah
கீர்வான் யுத்த விக்ரம் ஷா
திலோத்தமா தேவி
அமர் லெட்சுமி தேவி
விலாஸ்வதிஅ லெட்சுமி தேவி
தனஷாகி லெட்சுமி தேவி
அரச குலம்ஷா வம்சம்
தந்தைபிரதாப் சிங் ஷா
தாய்ராஜேந்திர ராஜ்ஜிய லெட்சுமி தேவி
பிறப்பு25 மே 1775
காத்மாண்டு நகரச் சதுக்கம், நேபாள இராச்சியம்
இறப்பு25 ஏப்ரல் 1806 (அகவை 30ல் குத்திக் கொல்லப்படல்)
காத்மாண்டு நகரச் சதுக்கம், நேபாள இராச்சியம்
சமயம்இந்து சமயம்

ராணா பகதூர் ஷா (Rana Bahadur Shah) (நேபாளி: रण बहादुर शाह) (1775 – 1806), நேபாள இராச்சியத்தை ஆண்ட ஷா வம்சத்தின் மூன்றாவது மன்னராவர். இவர் ஆட்சிக் காலத்தில், தற்கால உத்தரகாண்ட் பகுதிகளின் கார்வால், குமாவுன், சிர்மூர் மற்றும் கிழக்கில் சிக்கிம் பகுதிகள் வெல்லப்பட்டு நேபாள இராச்சியம் விரிவாக்கப்பட்டது.

பிரிதிவி நாராயணன் ஷா நிறுவிய நேபாள இராச்சியத்தின் இரண்டாவது மன்னரும், ராணா பகதூர் ஷாவின் தந்தையுமான, மன்னர் பிரதாப் சிங் ஷா (ஆட்சிக் காலம்: 1775–77) குறுகிய காலத்தில் மறைந்ததால், இரண்டரை குழந்தையாக இருந்த ராணா பகதூர் ஷா (ஆட்சிக் காலம்: 1777 – 1799) அரியணையில அமர்த்தப்பட்டார்.[2]

பிரதாப் சிங் ஷாவின் விதவை மனைவி ராணி ராஜராஜேஸ்வரி, குழந்தை ராணா பகதூர் ஷாவின் அரசப் பிரதிநிதியாக 1775 முடிய நேபாள இராச்சியத்தை ஆண்டார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1794ல் ராணா பகதூர் ஷா பருவ வயது நிறைந்தவுடன், நேபாள இராச்சியத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார். 1795ல் ராணா பகதூர ஷா, மைதிலி பிரதேசத்தின் பிராமணப் பெண் கந்தவதி தேவியை திருமணம் செய்து கொண்டதுடன், அப்பெண்ணிற்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்கே அரியணை ஏறும் உரிமையும் வழங்கினார்.

கந்தவதி தேவியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, ராணா பகதூர் ஷாவிற்கு ராஜராஜேஸ்வரி மற்றும் சுபர்ன பிரபா தேவி, ராணி திரிபுரசுந்தரி எனும் இரண்டு மனைவியரும், ராணா உக்கோட் ஷா மற்றும் சாம்செர் ஷா என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். [3]}}[4][5]

ராணா பகதூர் ஷாவின் மூன்றாம் மனைவி கந்தவதி தேவிக்கு 1797ல் பிறந்த கீர்வான் யுத்த விக்ரம் ஷாக்கு இளவரசு பட்டம் வழங்கப்பட்டது.[6] இதனால் ராணா பகதூர் ஷா தனது 23வது வயதில் மன்னர் பதவியை துறந்து, தன் மூன்றாம் மனைவிக்குப் பிறந்த மகன் கீர்வான் யுத்த விக்ரம் ஷாவை 23 மார்ச் 1799 அன்று அரியணையில் ஏற்றியதுடன், தன் மூத்த மனைவி ராணி ராஜராஜேஸ்வரி தேவியை, கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் அரசப்பிரதிநிதியாக நியமித்தார். [6] ராணா பகதூர் ஷா, சுவாமி நிர்குணானந்தர் எனும் பெயரில் துறவற வாழ்க்கை மேற்கொண்டார். இந்நிலையில் தபா வம்சத்தின் பீம்சென் தபா மற்றும் அவரது தந்தை அமர்சிங் தாபா படைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

கந்தவதி தேவியின் மரணத்திற்கு பின்னர் ராணா பகதூர் ஷா, துறவற வாழ்க்கையை கைவிட்டு, மீண்டும் நேபாள இராச்சிய மன்னராக விரும்பினார். நாட்டு மக்களும், அரசவையினரும் தன் முடிவை ஏற்காததால்,[7][8] , ராணா பகதூர் ஷா, மே, 1800ல் வாரணாசிக்குச் சென்று தன் எஞ்சிய நாட்களை கழித்தார். .[7] [8]

வாரணாசியில்: 1800–1804[தொகு]

ராணா பகதூர் ஷாவின் முன்னாள் மெய்க்காவலரான, தாபா வம்சத்தின் பீம்சென் தபா வாரணாசிக்கு வந்து, பகதூர் ஷாவின் ஆலோசகராக செயல்பட்டார். ராணா பகதூரின் மூத்த மனைவி ராணி ராஜராஜேஸ்வரியும் வாராணாசிக்கு வந்து ராணா பகதூருடன் இணைந்தார். இரண்டாம் மனைவி சுபர்ன பிரபா தேவி, காத்மாண்டிலே தங்கி குழந்தை இளவரசன் கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் அரசப்பிரதிநிதியாக செயல்பட்டார். [9].

26 சூலை 1801ல் ராண பகதூர் ஷாவை விட்டு நேபாளத்திற்கு திரும்பிய ராணி ராஜராஜேஸ்வரி, 26 செப்டம்பர் 1801 அன்று நேப்பாள இராச்சியத்தின் முதலமைச்சர் கீர்த்திமான் சிங் பஸ்னேத்தை அடியாட்களை வைத்துக் கொன்று விட்டு,[10] குழந்தை மன்னர் கீர்வான் யுத்த விக்கிரம் ஷாவின் அரசப்பிரதியாக மீண்டும் செயல்பட்டார்.

மீண்டும் காத்மாண்டிற்கு திரும்புதல்[தொகு]

வாரணாசியில் ராணா பகதூர் ஷாவின் ஆடம்பர வாழ்வு முறையால், தனி நபர்களிடமும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரிடமும் பல இலட்சம் ரூபாய்கள் கடன்பட்டார்.[11] [12] [13][14][11]

இந்நிலையில் தாமோதர பாண்டே தலைமையிலான நேபாள அமைச்சரவையை கலைத்து விட்டு, புதிய அமைச்சரவையை ராஜராஜேஸ்வரி நியமித்தார்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமை ஆளுநர் ரிச்சர்டு வெல்லசுலி, நேபாள இராச்சியத்திற்கு அளித்துக் கொண்டிருந்த ஆதரவை நீக்கினார்.

இதனால் வலிமைப் பெற்ற ராணா பகதூர் ஷா, பீம்சென் தாபா, தாமோதர பாண்டே போன்றவர்களின் ஆதரவுடன் நேபாள இராச்சியத்தின் மன்னராக மீண்டும் முடிசூட்டிக் கொண்டார்.

25 ஏப்ரல் 1806ல் தனது மாற்றாந் தாய் மகன் சேர் பகதூர் ஷாவால் கத்தியால் குத்தப்பட்டு, முப்பது வயதில் ராணா பகதூர் ஷா இறந்தார்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Royal Ark
  2. Acharya 2012, ப. 13.
  3. Acharya 2012, ப. 16.
  4. Pradhan 2012, ப. 12.
  5. Acharya 2012, ப. 16–17.
  6. 6.0 6.1 Acharya 2012, ப. 22–25.
  7. 7.0 7.1 Pradhan 2012, ப. 13.
  8. 8.0 8.1 Acharya 2012, ப. 28–32.
  9. Acharya 2012, ப. 32.
  10. Acharya 2012, ப. 34.
  11. 11.0 11.1 Nepal 2007, ப. 54–55.
  12. Regmi 1987a; Regmi 1987b; Regmi 1988.
  13. Pradhan 2012, ப. 14.
  14. Acharya 2012, ப. 42–43, 48.

வெளி இணைப்புகள்[தொகு]

ராணா பகதூர் ஷா
பிறப்பு: 25 மே 1775 இறப்பு: 25 ஏப்ரல் 1806
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
பிரதாப் சிங் ஷா
நேபாள மன்னர்
1777–1799
பின்னர்
கீர்வான் யுத்த விக்ரம் ஷா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_பகதூர்_ஷா&oldid=3361820" இலிருந்து மீள்விக்கப்பட்டது