யோகன்னசு விஸ்லிகெனசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகன்னசு விஸ்லிகெனசு
யோகன்னசு விஸ்லிகெனசு
யோகன்னசு விஸ்லிகெனசு
பிறப்பு 24 சூன் 1835
கிளெய்னெய்ச்ஸ்டெட்டு (தற்போதைய குவெர்பர்ட்டு), புருசிய சாக்சோனி
இறப்பு5 December 1902 (1902-12-06) (அகவை 67)
செருமானியப் பேரரசு
தேசியம்செருமானியர்
துறைவேதியியல்
முக்கிய மாணவர்வில்லியம் என்றி பெர்க்கின்
அறியப்பட்டதுமுப்பரிமாண மாற்றிய வேதியியல்
பரிசுகள்1898 ஆம் ஆண்டில் டேவி பதக்கம்

யோகன்னசு விஸ்லிகெனசு (Johannes Wislicenus)  (24 சூன் 1835 - 5 டிசம்பர் 1902) ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார். தொடக்க கால முப்பரிமாண மாற்றிய வேதியியலில் இவரது பணி மிகவும் முக்கியமானதாகும்.

சுயசரிதை[தொகு]

இவர் தீவிர புராட்டஸ்டன்ட் சமய கருத்தியலாளரான குஸ்டாவ் விஸ்லிகெனசு என்பவரின் மகன் ஆவார்.[1] 1835 ஆம் ஆண்டு சூன் 24 ஆம் நாள் யோகன்னசு [2] இவர் கிழக்கு செருமனியில் சாக்சோனி-அனால்ட் என்ற மாநிலத்தின் பகுதியான கிளெய்னெய்ச்ஸ்டெட்டு (தற்போதைய குவெர்பர்ட்டு) என்ற நகரில் பிறந்தார். 1853 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். சிறிது காலம் அவர் ஹார்வர்ட் வேதியியலாளர் எபன் ஹார்ஸ்போர்டின் உதவியாளராக செயல்பட்டார், 1855 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள மெக்கானிக்ஸ் நிறுவனத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1856 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்குத் திரும்பிய அவர், ஹாலே பல்கலைக்கழகத்தில் வில்ஹெல்ம் ஹென்ரிச் ஹென்ட்ஸுடன் தொடர்ந்து வேதியியல் பயின்றார். 1860 ஆம் ஆண்டில், அவர் சூரிச் பல்கலைக்கழகத்திலும் , சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்பநிறுவனம் சூரிக்கிலும் விரிவுரைகள் நிகழ்த்தத் தொடங்கியிருந்தார். மேலும் 1868 ஆண்டு வாக்கில் அவர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக இருந்தார். 1870 ஆம் ஆண்டில், சூரிச்சில் உள்ள சவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொது வேதியியல் பேராசிரியராக ஜார்ஜ் ஸ்டெய்டெலருக்குப் பின் தேர்வு செய்யப்பட்டார். சூரிச் பல்கலைக்கழகத்தில் முழுமையான பேராசிரியர் தகுதி நிலையில் இருந்தார். 1872 ஆம் ஆண்டில், வோர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் தலைவராக அடோல்ஃப் ஸ்ட்ரெக்கருக்குப் பின் அவர் தொடர்ந்தார். மேலும் 1885 ஆம் ஆண்டில், ஹெர்மன் கோல்பேவுக்குப் பிறகு லீப்சிக் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றினார், அங்கு அவர் 1902 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் இறந்தார். [2]

ஆராய்ச்சி[தொகு]

1860 களின் பிற்பகுதியில்,[சான்று தேவை] விஸ்லிகெனசு தனது ஆராய்ச்சிப் பணியை கரிம வேதியியலுக்கு அர்ப்பணித்தார். [2] 1868 முதல் 1872 வரை மாற்றிய லாக்டிக் அமிலங்கள் குறித்த அவரது பணிகள் [3] வெவ்வேறு இயற்பியல் பண்புகளைக் கொண்ட இரண்டு பொருள்களைக் கண்டுபிடித்தன, ஆனால் ஒரே மாதிரியான வேதியியல் கட்டமைப்பைக் கொண்டிருந்தன . [2] அவர் இந்த வேறுபாட்டை "வடிவியல் மாற்றியம்" என்று அழைத்தார். [2] பின்னர் அவர் நான்முகி வடிவியல் அமைப்பைக் கொண்ட கார்பன் அணுவின் ஜே.எச். வான்ட் ஹாஃப் கோட்பாட்டை ஊக்குவித்தார். இக்கோட்பாடானது "சிறப்புத் தன்மையுள்ள இயக்கப்பட்ட சக்திகள், பிணைப்பு-ஆற்றல்கள்" [2] தான் மூலக்கூறில் உள்ள அணுக்களின் இடம் சார்ந்த நிலையைத் தீர்மானிக்கின்றன என்ற உத்தேச அனுமானத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அணுக்களின் இடஞ்சார்ந்த அமைவியலை பரிசோதனையால் கண்டறியக்கூடிய ஒரு முறையை வழங்கியது. வோர்ஸ்பர்க்கில் இருந்தபோது, விஸ்லிகெனஸ் கரிமத் தொகுப்பு முறையில் எத்தில் அசிட்டோ அசிடேட் பயன்பாட்டை உருவாக்கினார். [2] இருப்பினும், அவர் கனிம வேதியியலிலும் தீவிரமான ஆய்வாளராக இருந்தார், சோடியம் அசைடு உற்பத்திக்கான வேதிவினைகளைக் கண்டறிந்தார். 1893 ஆம் ஆண்டில் முதன் முதலில் வளையபென்டேனைத் தயாரித்தவர் ஆவார்.[4]

விருதுகள்[தொகு]

1898 ஆம் ஆண்டில் இலண்டன் அரச கழகம் விஸ்லிகெனசுக்கு டேவி பதக்கத்தை வழங்கியது. [2]

குறிப்புகள்[தொகு]

  1. The New International Encyclopedia. 23 (2nd ). New York: Dodd, Mead and Company. 1916. பக். 731. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Chisholm 1911.
  3. Chemical Structure, Spatial Arrangement: The Early History of Stereochemistry, 1874–1914. Routledge. 2017. 
  4. J. Wislicenus and W. Hentschel (1893) "Der Pentamethenylalkohol und seine Derivate" (Cyclopentanol and its derivatives), Annalen der Chemie, 275 : 322-330; see especially pages 327-330. Wislicenus prepared cyclopentane from cyclopentanone ("Ketopentamethen"), which is prepared by heating calcium adipate.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகன்னசு_விஸ்லிகெனசு&oldid=3295428" இலிருந்து மீள்விக்கப்பட்டது