யெவ்கேனி கிரினோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யெவ்கேனி கிரினோவ்
Евгений Леонидович Кринов
பிறப்பு(1906-03-03)3 மார்ச்சு 1906
தாம்போவ், உருசியா
இறப்பு2 சனவரி 1984(1984-01-02) (அகவை 77)
மாஸ்கோ, உருசியா
தேசியம்உருசியர்
துறைவானியல், நிலவியல்

யெவ்கனி இலியோனிதோவிச் கிரினோவ் (Yevgeny Leonidovich Krinov, உருசியம்: Евгений Леонидович Кринов, 3 மார்ச்சு 1906 - 2 ஜனவரி 1984), ஒரு சோவியத், உருசிய வானியலாளரும் புவியியலாளரும் ஆவார். இவர் உருசியப் பேரரசின் தாம்போவ் ஆட்சிப் பிரிவின் மோர்ழ்சான்சுகி மாவட்டத்தில் அமைந்த ஒத்யாசி எனும் ஊரில் பிறந்தார். இவர் பெயர்பெற்ற விண்கல் ஆய்வாளர் ஆவார்; 1966 இல் கண்டறியப்பட்ட கிரினோவைட் கனிமம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.

அறிவியல் பணிகள்[தொகு]

இவர் 1926 முதல் 1930 வரை அறிவியல் கல்விக்கழக கனிம அருங்காட்சியத்தின் விண்கல் பிரிவில் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் இவர் துங்குழ்சுகா நிகழ்வு குறித்து இலியோனிது குலிக் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்தார். இவர் 1929 முதல் 1930 வரையிலான துங்குழ்சுகா தேட்ட்த்தில் வானியலாளராக பங்கேற்றார். இந்த்த் தேட்ட்த் தரவுகளை வைத்து இவர் உருசிய மொழியில் ஒரு தனிவரைவு நூலை 1949 இல் எழுதினார். இந்நூலின் பெயர் துங்குழ்சுகா விண்கல் கனிமம் என்பதாகும்.

இடர்தரும் நைட்டிரேட் படலங்களை நீக்க, இவர் 1975 ஆம் ஆண்டில், குலிக்கின் 1938 தேட்டம் முதல் துங்குழ்சுகா நிகழ்வு வரையிலான ஒளிப்பட எதிர்நகல்களை எரித்துவிட்டார். என்றாலும் அவற்றின் நேர்நகல்கள் ஆய்வுக்காக தோம்சுக் நகரில் காப்பாக வைக்கப்பட்டுள்ளன.[1]

அறிவியல் விருதுகள்[தொகு]

  • 1961 – சோவியத் அறிவியல் கல்விக்கழகம் இவருக்குத் தகைமை முனைவர் பட்டம் வழங்கியது
  • 1971 - இலியனார்டு பதக்கம்

தகைமை[தொகு]

சோவியத் வானியலாளர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக் 1977 இல் கண்டுபிடித்த 2887 கிரினோவ் எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[2]

தேர்ந்தெடுத்த நூல்தொகை[தொகு]

  • 1947 Spectral Reflective Capacity of Natural Formations
  • 1949 துங்கூசுக்கா விண்வீழ்கல் (உருசியம்)
  • 1952 Fundamentals of Meteoritics
  • 1959 Sikhote-Alin Iron Meteorite Shower, Vol. I
  • 1963 Sikhote-Alin Iron Meteorite Shower, Vol. II
  • 1966 Giant Meteorites

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யெவ்கேனி_கிரினோவ்&oldid=3848730" இலிருந்து மீள்விக்கப்பட்டது