போஜ்பூர் மாவட்டம், நேபாளம்
போஜ்பூர் மாவட்டம் (Bhojpur District) (நேபாளி: भोजपुर जिल्लाⓘ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் நேபாள மாநில எண் 1-இல், கோசி மண்டலத்தில் உள்ள இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் போஜ்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போஜ்பூர் மாவட்டம் 182,459 மக்கள் தொகையும்[1], 1,507 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது.[1] இம்மாவட்டத்தின் வடக்கு மலைப் பகுதிகளில் ருத்திராட்ச மரங்கள் வளர்கிறது.
புவியியல்[தொகு]
நேபாளத்தின் எட்டு வகையான தட்ப வெப்ப மண்டலங்களில் போஜ்பூர் மாவட்டம், ஐந்தாவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
3% மாவட்டப் பரப்பளவு 300 மீட்டர் உயரத்திலும், 31% பகுதிகள் 300 முதல் 1000 மீட்டர் உயரத்திலும், 50% பகுதிகள் 1000 முதல் 2000 மீட்டர் உயரத்திலும், 15% பகுதிகள் 2000 முதல் 3000 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்[தொகு]
போஜ்பூர் மாவட்டத்தில் ராய் பழங்குடி மக்கள், நேவார் மக்கள் மற்றும் கிராதர்கள் எனும் வேடுவ இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி, நேபாள மொழிகள் பேசப்படுகிறது.
தட்ப வெப்பம்[தொகு]
Climate Zone[3] | உயரம் | % பரப்பளவு |
---|---|---|
தெற்கு பகுதியின் தட்ப வெப்பம் | -300 முதல் 1,000 அடி | 2.7% |
நடுப்பகுதி தட்ப வெப்பம் | 300 - 1,000 மீட்டர் 1,000 - 3,300 அடி |
30.5% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர் 3,300 - 6,600 அடி |
49.8% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் 6,400 - 9,800 அடி |
15.1% |
மான்ட்டேன்#Subalpine zone | 3,000 - 4,000 மீட்டர்கள் 9,800 - 13,100 அடி |
1.7% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013