பொதுத்துறை பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் முதன்மை கட்டிடம்

பொதுத்துறை பல்கலைக்கழகம் (public university) ஓர் நாட்டின் (அல்லது அந்நாட்டின் உள்ளாட்சி அங்கமாக உள்ள மாநில அல்லது நகராட்சி அரசுகளால்) அரசால் பெரிதும் நிதியாதரவு நல்கப்படுகின்ற ஓர் பல்கலைக்கழகம் ஆகும். இது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாறானது. தேசிய பல்கலைக்கழகம் எனப்படுவது உலகின் சில பகுதிகளில் பொதுத்துறை பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. உலகின் பல புகழ்பெற்ற கல்வி வளாகங்கள் பொதுத்துறை பல்கலைக்கழகங்களாக இருப்பதுடன் சிறந்த ஆராய்ச்சிகளுக்கு உய்விடமாக உள்ளன. உலகளவில் சிறப்புமிக்க சில பொதுத்துறை பல்கலைக்கழகங்கள்: இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, சுவிசு கூட்டாட்சி தொழில்நுட்பக் கழகம், சூரிச், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி, டொரொன்டோ பல்கலைக்கழகம்[1].

இந்தியா[தொகு]

இந்தியாவில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் ஆய்வுக்கழகங்களும் பொதுத்துறையில் உள்ளன. பொறியியல் கல்லூரிகளும் பட்டப்படிப்பு கல்லூரிகளும் தனியார்த்துறையில் இருந்தாலும் அவை பெரும்பாலும் பொதுத்துறை பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளன. சில தனியார்த்துறை கல்லூரிகள் மத்திய அல்லது மாநில அரசின் மான்யத்தைப் பெற்றுக்கொண்டு செயல்படுகின்றன. இத்தகைய கல்விக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையும் கட்டணமும் அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]