பெரிந்தல்மண்ணை

ஆள்கூறுகள்: 10°59′N 76°14′E / 10.98°N 76.23°E / 10.98; 76.23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிந்தல்மன்னா
—  நகரம்  —
பெரிந்தல்மன்னா
இருப்பிடம்: பெரிந்தல்மன்னா

, கேரளம்

அமைவிடம் 10°59′N 76°14′E / 10.98°N 76.23°E / 10.98; 76.23
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் மலைப்புறம்
[[கேரளம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[கேரளம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி பெரிந்தல்மன்னா
மக்கள் தொகை 44,613 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெரிந்தல்மண்ணை கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்ட நகரமாகும்.பெரும்தள்ளு என்பதிலிருந்து இந்தப் பெயர் திரிந்துள்ளது. தமிழகத்தின் பல்லவ ஆட்சியின் கீழ் வள்ளுவகோணாத்திரி என்ற குறுநில மன்னர்கள் ஆண்ட வள்ளுவநாட்டின் தலைநகரமாக விளங்கியது. கோழிக்கோடு,மஞ்சேரி,மலைப்புறம்,நீலாம்பூர் மற்றும் பாலக்காடு அருகிலுள்ள பெருநகரங்களாகும்.கிழக்கிந்தியக் கம்பனி மலபார் உடன்படிக்கைப்படி இங்குதான் முதலில் அவர்களது உயர்நிலைப்பள்ளி, நீதிமன்றம்,வட்டாட்சி அலுவலகம் ஆகியனவற்றை நிறுவினர். பெரிந்தல்மன்னாவில் நான்கு மருத்துவமனைகளும் ஓர் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. பல நாற்றாண்டுகளாக பெரிந்தல்மன்னா வணிக மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. பெப்ரவரி 10,1990ஆம் ஆண்டில் நகராட்சியாக உயர்த்தப்பட்டது.

ஞானப்பனை என்ற இலக்கிய படைப்பினை அளித்த கவிஞர் பூந்தானம் அவர்களுடைய வீடு,பூந்தானம் இல்லம், பெரிந்தல்மன்னாவிற்கு அருகாமையில் உள்ளது. ஈ. எம்.எஸ். நம்பூதிரிப்பாட்டின் பிறப்பிடமான எலம்குளம் பெரிந்தல்மன்னாவிற்கு வெகு அருகில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001 இந்தியக் கணக்கெடுப்பின்படி பெரிந்தல்மன்னாவின் மக்கள் தொகை 44,613. ஆண்கள் 48% மற்றும் பெண்கள் 52%. படித்தவர் விழுக்காடு 81%, நாட்டின் சராசரியான 59.5%வை விடக் கூடுதலாகும: ஆண் படிப்பறிவு 83%, பெண்கள் படிப்பறிவு 79%. ஆறு அகவைக்கும் குறைவானவர் விழுக்காடு 14% ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிந்தல்மண்ணை&oldid=2222779" இலிருந்து மீள்விக்கப்பட்டது