புவியீர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திணிவு (mass) கொண்ட ஒவ்வொரு பொருளும் இன்னொரு பொருளை ஈர்க்கிறது என்பது இயற்கையில் உள்ள அடிப்படையான ஒரு தோற்றப்பாடாகும். எனினும் சிறிய பொருட்களுக்கு இடையில் உள்ள இந்த ஈர்ப்புச் சக்தி புலப்படக்கூடிய அளவில் இருப்பதில்லை. கோள்கள், விண்மீன்கள் போன்ற மிகப்பெரிய பொருட்களில் இந்த ஈர்ப்புச் சக்தி புலனாகக் கூடியதாக உள்ளது. புவியைச் சுற்றியும் இந்த ஈர்ப்புப் புலம் (gravitational field) உண்டு. இதனால் புவி பிற பொருட்களைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது. இதுவே புவியீர்ப்பு எனப்படுகின்றது. இவ்வீர்ப்பின்போது புவி அது ஈர்க்கும் பொருள்மீது செயற்படுத்தும் விசை புவியீர்ப்பு விசை ஆகும். இவ்விசையின் அளவு புவியின் திணிவிலும், புவியிலிருந்து விசை தொழிற்படும் இடத்தின் தூரத்தின் அளவிலும் தங்கியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியீர்ப்பு&oldid=1664919" இலிருந்து மீள்விக்கப்பட்டது