புவியின் காந்தப்புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவியின் காந்தப்புலம் (Earth's magnetic field) என்பது புவியினைச் சுற்றியுள்ள காந்த புலமாகும். காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்ற இயற்பியல் அடிப்படைப் பண்பின்படி காந்தத்தின் வடக்கு புவி தென் காந்தபுலமாகவும் காந்தத்தின் தெற்கு புவி வட காந்தபுலமாகவம் உள்ளது.

புவிக் காந்தப்புலத் தோற்றம்[தொகு]

புவியின் காந்தப்புலம் பற்றித் தெளிவான கருத்துரை தற்சமயம் வரை கிடைக்காவிட்டாலும், பொதுவாக டைனமோ விளைவு ஏற்புடையாதக உள்ளது. காந்தப் பட்டையின் காந்தப் பண்பு எதிர்மின்வயமாக்கப்பட்ட எலக்ட்ரான்களினால் ஏற்படுவதைப் போன்று, புவியின் வெளி கருவத்தில் சுழன்று கொண்டுள்ள தனிமங்களினால் (இரும்பு, நிக்கல் மற்றும் பல..) மின்னாற்றல் உருவாகி அதன் அதிகப்படியான எதிரிமின் எலக்ட்ரான்கனினால் காந்தப்புலம் உருக்கொள்வதாக கருத்தப்படுகின்றது, இவ்வியக்கமே டைனமோ விளைவு என்றழைக்கப்படுகின்றது.[1]

சூரியக் காற்று[தொகு]

புவிகாந்தப் புலத்திற்கும் கோளிடை காந்தப் புலத்திற்கும் இடைநிகழும் வினையின் உருவகம்.

சூரியனிடமிருந்து வரும் ஆற்றல் மிக்க மின்னாற்றப்பட்ட துகளிகளிடமிருந்து புவிக்காந்தப்புலமே காக்கின்றது. வான் ஆலன் கதிர்வீச்சுப் பட்டையும் ( புவிக் காந்தப் புல எதிர் மன்னாற்துகள்களால் பேரண்டத்திலிருந்து வரும் அண்டக்கதிர்வீச்சுகளை தாக்குவாதல் உருவாகும் பட்டை) சற்று சூரியக் காற்று துகள்களை தடுத்தாலும் புவி தன்னுடைய காந்தப் புலத்தாலே பெருமளவு தற்காத்துக் கொள்கின்றது. மேலும் சூரியக் காற்று அதிகமாக உள்ள தருணங்களில் புவிகாந்த துருவப்பகுதியில் அரேரா எற்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவியின்_காந்தப்புலம்&oldid=2976124" இலிருந்து மீள்விக்கப்பட்டது