புகிட்னொன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகிட்னொன்
மாகாணம்
மாகாண சிறப்பிடங்கள்
மாகாண சிறப்பிடங்கள்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்வடக்கு மின்டனவு
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

புகிட்னொன் (Bukidnon) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், வடக்கு மின்டனவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மலேபலே ஆகும். இது 1914-ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2]இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜோச் மரியாபார். சுபிரி. ஜேஆர். (Jose Maria R. Zubiri, Jr.) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 10,498.59 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015-ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக புகிட்னொன் மாகாணத்தின் சனத்தொகை 1,415,226 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 3-ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 16-ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 130 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 61-ஆம் மாகாணம் ஆகும். அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் 464 கிராமங்களும், 20 மாநகராட்சிகளும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகிட்னொன்&oldid=3591063" இலிருந்து மீள்விக்கப்பட்டது