பிரெஞ்சு இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரெஞ்சு இலக்கணம் என்பது பிரெஞ்சு மொழியின் இலக்கணத்தை குறிக்கும். அதாவது, அம்மொழியை பிழையின்றி பயில உதவும் நெறிகள் அல்லது விதிகள் என கூறலாம். இது, பிற உரோமானிய மொழிகளின் இலக்கணத்தை போன்றே இருக்கிறது.

பிரெஞ்சு தன் சொற்களின் இறுதிகளை ஓரளவு மாற்றியமைக்கின்ற ஒரு மொழி (அதாவது, பிரெஞ்சு சொற்கள் ஓரளவிற்கு உருபுகள் கொள்கின்றன). பெயர்ச்சொல் ஒருமை, பன்மையிலும்; பெயர் உரிச்சொல் தன் பெயர்ச்சொல்லின் எண், பால் (ஆண்பால் அல்லது பெண்பால்); இடப் பெயர்ச்சொல் இடம், எண்(Number), பால், வேற்றுமையிலும்; வினைச்சொல் காலம், எண்ணம்(Mood), இடம்(Person), எண் ஆகியவைகளிலும் அவைகளுக்கு ஏற்றவாறு உருபுகளைக் கொள்கின்றன. வேற்றுமை(Case), சொல் வரிசை(Word order) மற்றும் முன்விபக்திகளைக்(Prepositions) கொண்டு குறிக்கப்பெறுகிறது.

சொற்களின் வகை[தொகு]

பிரெஞ்சு மொழியிலும், பிற ஐரோப்பிய மொழிகளைப் போன்று, சொற்களின் வகை (Les parties du discours) 8 ஆகும்.

௧. பெயர்ச்சொல் (Le nom)

௨. இடப் பெயர்ச்சொல் (Le pronom)

௩. வினைச்சொல் (Le verbe)

௪. பெயர் உரிச்சொல் (L'adjectif)

௫. வினை உரிச்சொல் (L'adverbe)

௬. முன்விபக்தி (La preposition)

௭. இடைபடுஞ்சொல் (La conjunction)

௮. வியப்பிடைச்சொல் (L'interjection)

பெயர்ச்சொல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு பெயர்ச்சொல்

எண்[தொகு]

பிரெஞ்சு மொழியில் ஒருமை(Singulier), பன்மை(Pluriel) என இரு எண்கள் உள்ளன.

(எ-டு)

  • œil - yeux (கண் - கண்கள்)
  • cheval - chevaux (குதிரை - குதிரைகள்)
  • homme - hommes (ஆண் - ஆண்கள்)

பால்[தொகு]

பிரெஞ்சில் இரண்டு பால்கள்(Genre) மட்டுமே உள்ளன. அவை, ஆண்பால்(Masculin) மற்றும் பெண்பால்(Féminin).

(எ-டு)

  • chanteur - chanteuse (பாடகன் - பாடகி)
  • homme - femme (ஆண் - பெண்)
  • fils - fille (மகன் - மகள்)

வேற்றுமை[தொகு]

பிரெஞ்சில் வேற்றுமைகளுக்கு உருபுகள் கிடையாது. (அதாவது, பிரெஞ்சு வேற்றுமைகள் உருபுகள் கொள்வதில்லை.) அவைகள் முன்விபதி மற்றும் சொல் வரிசை அல்லது வாக்கிய அமைப்பை கொண்டே வெளிப்படுகின்றன.

பெயர்ச்சொற்குறி[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி

பிரெஞ்சு மொழியில் மூன்று வகையான பெயர்ச்சொற்குறிகள்(Les articles) உள்ளன. அவை,

௧. நிச்சய பெயர்ச்சொற்குறி (L'article défini)

௨. நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (L'article indéfini)

௩. பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி (L'article partitif) ஆகும்.

இடப் பெயர்ச்சொல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு இடப் பெயர்ச்சொல்

வினைச்சொல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு வினைச்சொல்

பெயர் உரிச்சொல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு பெயர் உரிச்சொல்

பிரெஞ்சு பெயர் உரிச்சொல், அதனுடன் வரும் பெயர்ச்சொல்லுடனே ஒன்றி வரும்.

வினை உரிச்சொல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு வினை உரிச்சொல்

பிரெஞ்சு வினை உரிச்சொற்கள் ஒரு பெயர் உரிச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, வாக்கியப்பகுதியையோ அல்லது மற்றொரு வினை உரிச்சொல்லையோ மாற்றவே பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் உருபு ஏதும் கொள்வதில்லை; அதாவது, அவைகள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்வதில்லை.

(எ-டு)

௧. Le professeur parle lentement. (ஆசிரியர் மெதுவாகப் பேசுகிறார்.) (ஒரு வினைச்சொல்லை மாற்றியமைத்துள்ளது)

௨. Le professeur parle bien lentement. (ஆசிரியர் மிகவும் மெதுவாகப் பேசுகிறார்.) (ஒரு வினை உரிச்சொல்லை மாற்றியமைத்துள்ளது)

௩. Le professeur est très gentil. (ஆசிரியர் மிகவும் நல்லவர்.) (ஒரு பெயர் உரிச்சொல்லை மாற்றியமைத்துள்ளது)

முன்விபக்தி[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு முன்விபக்தி

இடைபடுஞ்சொல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு இடைபடுஞ்சொல்

காரணம் (Cause) comme, parce que, puisque, étant donné que, vu que, sous prétexte que (indicatif)
குறிக்கோள் (But) afin que, de façon à ce que, de manière que, pour que (subjonctif)
எதிர்மறை குறிக்கோள் (But négatif) (சில விளைவுகளைத் தவிர்க்கும் பொழுது) de peur que, de crainte que (subjonctif)
ஒப்பிடுதல் (Comparaison) comme, de même que, ainsi que, plus/moins que (indicatif)
சலுகை (Concession) quoique, quoi que, bien que, malgré le fait que (subjonctif)
கட்டுப்பாடு (Restriction) même si (indicatif ), encore que, en admettant que (subjonctif)
மாறுபட்ட கட்டுப்பாடு (Restriction alternative) tandis que, alors que (indicatif)
நிபந்தனை (Condition) si, même si (indicatif), au cas où (conditionnel), à condition que, pourvu que, à supposer que (subjonctif)
எதிர்மறை நிபந்தனை (Condition négative) à moins que (subjonctif), sauf si, faute de quoi (indicatif)
உடனிகழ்தல் (Simultanéité) au moment où, en même temps que, pendant que, tandis que, alors que, lorsque, quand (indicatif)
முன்னிகழ்தல் (Antériorité) avant que, jusqu'à ce que, en attendant que (subjonctif)
பின்னிகழ்தல் (Postériorité) après que, dès que, aussitôt que, une fois que (indicatif)
விகிதம் (Proportion) à mesure que, chaque fois que, toutes les fois que (indicatif)
விளைவு (Conséquence) à tel point que, si bien que, au point que, de sorte que, de façon que, si/tellement/tant... que (indicatif)
ஒருங்கிணைத்தல் (Coordination) mais, ou, et, donc, or, ni, car

வியப்பிடைச்சொல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: பிரெஞ்சு வியப்பிடைச்சொல்

இலக்கண உறவு[தொகு]

இலக்கண உறவு எட்டு வகைப்படும். அவை,

௧. வேற்றுமை

௨. பால்

௩. எண்

௪. காலம்

௫. இடம்

௬. எண்ணம்

௭. வினை வாக்கியம்

௮. ஒப்பீடு/ஒப்பீட்டு வாக்கியம் ஆகும்.

சொல் வரிசை[தொகு]

வாக்கியப்பகுதியின்(Clause) சொற்கள் இந்த வரிசையையே தொடர்ந்து வரும். ஆனால், எல்லா நேரங்களிலும் அனைத்து வகை சொற்களும் அதில் வருவதில்லை.

௧. வினை உரிச்சொல்

௨. எழுவாய்

௩. ne (பொதுவாக இது ஒரு எதிர்மறைக்குறியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு பிற பயன்பாடுகளும் உண்டு.)

௪. தன்னிலை மற்றும் முன்னிலையின் செய்யப்படுபொருள் இடப் பெயர்ச்சொல்(Pronom d'objet), அல்லது படர்க்கையின் இடஞ்சுட்டு இடப் பெயர்ச்சொல்(Pronom réfléchi) (me, te, nous, vous, se ஆகியவைகளுள் ஒன்று)

௫. படர்க்கையின் இரண்டாம் வேற்றுமை செய்யப்படுபொருளின் இடப் பெயர்ச்சொல் (le, la, les ஆகியவைகளுள் ஒன்று)

௬. படர்க்கையின் நான்காம் வேற்றுமை செய்யப்படுபொருளின் இடப் பெயர்ச்சொல் (lui அல்லது leur)

௭. y என்னும் இடப் பெயர்ச்சொல்

௮. en என்னும் இடப் பெயர்ச்சொல்

௯. வினைமுற்று (உதவி வினைச்சொல்லாகவும் இருக்கலாம்)

௧0. வினை உரிச்சொல்

௧௧. rien என்னும் இடப் பெயர்ச்சொல்

௧௨. முக்கிய வினைச்சொல் (வினைமுற்று உதவி வினைச்சொல்லாக இருக்கும் பட்சத்தில்)

௧௩. வினை உரிச்சொல் மற்றும் செய்யப்படுபொருள்

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_இலக்கணம்&oldid=2883549" இலிருந்து மீள்விக்கப்பட்டது