பிரகாஷ் வீர் சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டிதர் பிரகாச வீர சாஸ்திரி (30 திசம்பர் 1923 – 23 நவம்பர் 1977) என்பவர் ஒரு சமஸ்கிருத அறிஞரும் ஆர்ய சமாஜ இயக்கத் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முராதாபாத் பகுதியில் பிறந்த இவர்  இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சம்பூர்ணானந்த் சமசுகிருதப் பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி பட்டம் பெற்றார். 1958 ஆம் ஆண்டு சுயேட்சையாக நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். தான் மறையும் வரையில் மக்களைவையிலும்[1] மாநிலங்களவையிலும்[2] உறுப்பினராக இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

பேச்சுத் திறன்[தொகு]

சாஸ்திரி தன்னுடைய வீரம் செறிந்த பேச்சு நடைக்குப் பெயர் பெற்றவர். ஐக்கிய நாடுகள் அவையில் முதன் முதலில் இந்தியில் பேசிய இந்தியர் இவரே. இரண்டாமவர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆவார். ஆங்கிலம் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட போது சாஸ்திரி அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

சமயப் பணி[தொகு]

சாஸ்திரி ஆரிய சமாஜ இயக்கத்தின் தீவிரமான தொண்டராக விளங்கினார். [3] மக்களவையில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் சமய பாதுகாப்புச் சட்டத்தை இவர் 1960 ஆம் ஆண்டு முன்மொழிந்தார். 

இரயில் விபத்து[தொகு]

இவர் ஒரு இரயில் விபத்தில் உயிரிழந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Government Member Roster - Fourth Lok Sabha Member Roster". பார்க்கப்பட்ட நாள் 6 May 2007.
  2. Election Commission of New Delhi (1962). "Key Highlights on General Elections, 1962 to the Third Lokh Sabha" (PDF). Archived from the original (PDF) on 5 ஜூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 6 May 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Brigadier Chitranjan Sawant, VSM (22 February 2002). "The Triumph at Tankara". Aryasamaj Online Database. Archived from the original on 2 ஜூலை 2007. பார்க்கப்பட்ட நாள் 6 May 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_வீர்_சாஸ்திரி&oldid=3563430" இலிருந்து மீள்விக்கப்பட்டது