பின்தங்கிய சிப்பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
c6 black pawn
d5 black pawn
d4 white pawn
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கருப்பு ஆட்டக்காரருக்கு c6 கட்டத்தில் பின்தங்கிய சிப்பாய்.

சதுரங்க விளையாட்டில் பின்தங்கிய சிப்பாய் (Backward pawn) என்றால் ஒரு சிப்பாய் அதே நிறத்திலுள்ள சக சிப்பாய்களைக் காட்டிலும் அடுத்துள்ள வரிசையில் பின்னால் நிற்பதைக் குறிக்கும். இவ்வாறு பின்தங்கி நிற்கும் சிப்பாயால் இன்னொரு காயின் பாதுகாப்புடன் முன்நகர முடியாது.[1] படத்தில் c6 கட்டத்தில் உள்ள சிப்பாய் பின்தங்கி நிற்கும் சிப்பாய்க்கு உதாரணமாகும்.


இயல்பான பலவீனம்[தொகு]

பின்தங்கிய சிப்பாய்கள் பொதுவாக இருப்பிட இடர்பாடு கொண்டவைகளாகும். ஏனெனில் அவை இருக்குமிடங்களில் அவற்றால் தற்காத்துக் கொள்வதே கடினமாகும். மேலும் எதிர் ஆட்டக்காரர் இத்தகைய சிப்பாயைக் கைப்பற்ற அதன் முன்னால் அவருடைய காய்களை, குறிப்பாக குதிரையை நிறுத்த முடியும். பின்னர் இடர்ப்பாடு ஏதுமின்றி அதைக் கைப்பற்றவும் முடியும். பலவீனமான இடத்தில் நிற்கும் எதிரியின் காய்கள் மீது தாக்குதலை நிகழ்த்த விடாமல் பின் தங்கிய சிப்பாய்கள் தன் நிறத்திலுள்ள சக ராணி மற்றும் யானையின் முன்னால் நின்று தடுக்கவும் செய்கிறது.

நடைமுறை ஆட்டத்தில்[தொகு]

ஒருவேளை பின்தங்கிய சிப்பாயின் இருப்பிடம் படத்திலுள்ள இருப்பிடம் போல ஒரு பாதி திறந்த வரிசை என்றால் ஆட்டக்காரருக்கு ஏற்படும் பாதிப்பு அளப்பரியதாக இருக்கும். ஏனெனில் c வரிசையில் நிற்கும் எதிரியின் ராணி அல்லது யானையால் பின்தங்கியிருக்கும் c6 சிப்பாயை எளிதாகத் தாக்க முடியும். இச்சிப்பாயைப் பாதுகாக்க ஏனைய காய்களை பாதுகாப்புக்கு நிறுத்தினால் அவை பலவீனமாகி பிற நடவடிக்கைகளுக்கு அணிவகுத்துச் செல்வதில் இடர்ப்பாடு உண்டாகிறது.

abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
b7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
d6 black pawn
f6 black knight
b5 white knight
e5 black pawn
e4 white pawn
c3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கருப்பின் 6...d6 நகர்த்தலுக்குப் பின்னர் சுவெசிநிக்கோவ் மாறுபாடு முறை

விளையாடும் வீரர்களில் ஒருவர் வேண்டுமென்றே இத்தகைய பின்தங்கிய சிப்பாய்களை வேறுசில அனுகூலங்களுக்காக பாதுகாப்பின்றி தாக்கவிடுவர் என்பது நவீன திறப்பு கோட்பாடாகும். இதன் மூலம் அவ்வீரருக்கு தாக்குதல் முன்னெடுப்பு அல்லது வேகமான முன்னேற்றம் போன்ற அனுகூலங்கள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. சிசிலியன் தடுப்பாட்டத்திலுள்ள சுவெசிநிக்கோவ் மாறுபாடு முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

1.e4 c5 2. Nf3 Nc6 3. d4 cxd4 4. Nxd4 Nf6 (அல்லது 4...e5!? 5.Nb5 d6 – என்பது கலாசிநிக்கோவ் மாறுபாடு முறை) 5. Nc3 e5!? 6. Ndb5 d6 , என்ற நகர்வுகளுக்குப் பின்னர் கருப்பு நிற வீரருக்கு d6 கட்டத்தில் ஒரு பின்தங்கிய சிப்பாய் உண்டாகிறது. (படம் பார்க்கவும்). ஆனால் வெள்ளை இப்பொழுது 7. Bg5 a6 8. Na3 b5 9. Bxf6 gxf6! 10. Nd5 ( இரட்டைத் தாக்குதல் தொடுக்கும் கருப்பு சிப்பாயிடம் இருந்து மறைவது போல) என்ற நகர்வுகளுக்குப் பின்னர் குதிரையை நடுப்பகுதிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. அதாவது பின்தங்கிய கருப்பு d6 சிப்பாய்க்கு முன்னால் d5 கட்டத்தில் நின்று கருப்பு நிற ஆட்டக்காரரின் மையப்பகுதியை பலவீனமாக்குகிறது. 10... f5! (அல்லது 10...Bg7 11.c3 [a3 கட்டத்தில் உள்ள குதிரை நடுப்பகுதிக்கு Na3–c2–e3 நகர்வுகளின் வழியாக செல்ல வசதி ஏற்படுத்திக்கொள்ள] 11...f5!) 11. c3 Bg7 உம் பிற நகர்வுகளும் என இந்த ஆட்டம் தொடரும்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Silman 1998, ப. 236.

உசாத்துணைகள்[தொகு]

  • Golombek, Harry (1977), Golombek's Encyclopedia of Chess, Crown Publishing, ISBN 0-517-53146-1
  • Silman, Jeremy (1998), The Complete Book of Chess Strategy, Los Angeles: Siles Press, ISBN 1-890085-01-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்தங்கிய_சிப்பாய்&oldid=1918990" இலிருந்து மீள்விக்கப்பட்டது