பிஃபா உலகத் தரவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் 20 தரவரிசையில் - திசம்பர் 19, 2013 நிலவரம்[1]
தரவரிசை எண் அணி புள்ளிகள்
1  எசுப்பானியா 1507
2  செருமனி 1318
3  அர்கெந்தீனா 1251
4  கொலம்பியா 1200
5  போர்த்துகல் 1172
6  உருகுவை 1132
7  இத்தாலி 1120
8  சுவிட்சர்லாந்து 1113
9  நெதர்லாந்து 1106
10  பிரேசில் 1102
11  பெல்ஜியம் 1098
12  கிரேக்க நாடு 1055
13  இங்கிலாந்து 1041
14  ஐக்கிய அமெரிக்கா 1019
15  சிலி 1014
16  குரோவாசியா 971
17  ஐவரி கோஸ்ட் 918
18  உக்ரைன் 907
19  பொசுனியா எர்செகோவினா 899
20  பிரான்சு 893
முழுமையான பட்டியலுக்கு - Fifa.com பரணிடப்பட்டது 2012-09-14 at the வந்தவழி இயந்திரம்

பிஃபா உலகத் தரவரிசை (FIFA World Ranking) ஆடவர் கால்பந்தாட்டத்தில் தேசிய அணிகளை தரவீடு செய்யும் முறையாகும். தற்போது இந்த தரவரிசையில் முதலாமிடத்தில் எசுப்பானியா உள்ளது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய அணிகள் ஆடும் ஆட்டங்களின் முடிவுகளைக்கொண்டு இந்த தரவீடு செய்யப்படுகிறது. மிகுந்த வெற்றிகளைப் பெற்ற அணி மிகவும் உயர்ந்த தரவெண்ணைப் பெறுகிறது. இந்தத் தரவெண்கள் திசம்பர் 1992இல் அறிமுகப்படுத்தப்பட்டன. அர்கெந்தீனா, பிரேசில், பிரான்சு, செருமனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் எசுப்பானியா ஆகிய ஏழு அணிகள் முதலாமிடத்தில் வந்துள்ளன; இவற்றில் பிரேசிலே மிக நீண்டநாட்களாக முதலாமிடத்தில் இருந்தது.

பிஃபா அங்கீகரித்த முழு பன்னாட்டு ஆட்டங்களின் முடிவுகளைக் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. தற்போதுள்ள அமைப்பில், கடைசி நான்காண்டுகளில் அணி பெறுகின்ற வெற்றி/தோல்விகளைக் கொண்டு புள்ளிகள் வழங்கபடுகின்றன. அண்மைய ஆட்டங்களுக்கு, குறிப்பிடத்தக்க ஆட்டங்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.2006 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்த அமைப்பு முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படியான புதிய தரவரிசை சூலை 12, 2006இல் வெளியிடப்பட்டது.

இதற்கு மாற்றாக சதுரங்கத்திலும் வெய்ச்சியிலும் பயன்படுத்தப்படும் எலோ தரவுகோள் முறையை அடிப்படையாகக் கொண்ட உலக கால்பந்து எலோ தரவீடு உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "FIFA current ranking". Archived from the original on 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2014-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஃபா_உலகத்_தரவரிசை&oldid=3563296" இலிருந்து மீள்விக்கப்பட்டது