பார் அட் லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார் அட் லா (Bar at Law) அல்லது பாரிஸ்டர் என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆவர்.இவர்கள் கட்சிக்காரர்களின் நேரடி பிரதிநிதியாக செயல்பட இயலாதமையால் வழக்குரைஞர் (சாலிசிடர்) என்றழைக்கப்படுகின்ற வழக்கறிஞர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.இவர்கள் சட்ட நிபுணர்களாக இருந்து நீதிமன்ற வழக்காடலில் வழக்குரைஞரின் அழைப்பின் பேரில் உதவி புரிகின்றனர். வழக்கறிஞர்கள் சங்கம் (பார்)அல்லது இங்கிலாந்து அல்லது வேல்சில் கோர்ட் இன்கள் (Inn of court) எனப்படும் தொழில்முறை சங்கங்கள் இவர்களது தேர்வு,நடத்தை மற்றும் பயிற்சி முதலியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.

ஐக்கிய இராச்சியத்தின் கோர்ட் இன்கள் கட்டற்ற பாரிஸ்டர் சங்களாகும்.விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் இங்கிலாந்து சென்று இத்தகைய இன் ஒன்றில் சேர்ந்து சட்டப்பயிற்சி பெற்றவர் பார் அட் லா என அறியப்பட்டனர்.இன் ஒன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஒருவரே வழக்கறிஞர் சங்கத்தில் சேர அனுமதிக்கப்பட்டனர்.[1] தற்போது இந்தியாவில் பார் அட் லா என்ற முறைமை வழக்கத்தில் இல்லை.

வெளியிணைப்புகள்[தொகு]

ஆத்திரேலியா[தொகு]

ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்து[தொகு]

பிற நாடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Daniel Duman, The English & Colonial Bars in the 19th Century (Routledge: London, 1983) ISBN 0856644684, 9780856644689
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்_அட்_லா&oldid=3589768" இலிருந்து மீள்விக்கப்பட்டது